மு. கருணாநிதி 17 பொழிவாளர் வரவில்லை. அசையாமல் அப்படியே நின்று கந்தன் விம்மி விம்மி அழுதுவிட்டான். தன்னுடைய வீட்டுக் காரியத்திற்கு ஒருவர் வருவதாயிருந்து வராமல் போனாலும் பரவாயில்லை. பொதுக் காரியம் - பொது மக்களிடம் பணம் வசூல்செய்து பொதுமக்களை எப்படி ஏமாற்றுவது என ஏங்கினான். மேடைக்கு வந்து மக்க ளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். மக்கள் முணு முணுத்தபடி கலைந்தனர்.
வீட்டுக்கு வந்தான். கமலாவுக்கு காய்ச்சல் அதிக மாகிவிட்டது. கண்களிலே ஒளி குறைந்துவிட்டது. தாயார் பக்கத்திலே அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். கந்தன் ஓடிவந்து "கமலா! கமலா!" என்று அலறினான். அவள் மெல்ல வாய் திறந்தாள். "அத்தான் அந்த சந்தனக் கிண்ணம் என்று இதழசைத்தாள். 39 "கமலா அதை நான்தான் திருடி அடகு வைத் திருக்கிறேன் - பணம் வந்ததும் மீட்டுவிடலாம் என்று கதறினான். அவன் கதறலிடையே கமலா கண்ணை மூடினாள். பிறகு திறக்கவேயில்லை, கந்தன் அழுதான்; அழுதுகொண்டேயிருந்தான்.
இப்போது கந்தன் ஏழையல்ல. பணக்காரனாயில்லா விட்டாலும் பண வசதி இருக்கிறது. இருபது ரூபாய்க்கு அடகு வைத்த சந்தனக் கிண்ணத்தை வட்டியோடு முப்பது ரூபாய் கொடுத்தால் மீட்டுவிடலாம். 2