உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடும் நாடகமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு.கருணாநிதி 21 ப்ய அந்த சமயத்தில் ஒரு நாள், ஒரு கலர்புறா அவசர அவசரமாக துடித்துப் பறந்தபடி ஆலமரத்திற்கு வந்தது. அது பறந்து வந்த காரணம் ஒரு வேடன் அதைக் குறி பார்த்ததுதான். அந்த வேடன் உணவுக்காகப் புறா தேவையில்லை; கலர்புறா அழகாயிருக்கிறதே ! அதைப் பிடித்துச் சென்றால் நல்ல விலைக்கு விற்கலாம் என்ற ஆசையாலேயே அவன் அதைப் பின்தொடர்ந்தான். கலர்புறா ஆலமரத்தில் நுழைந்துவிட்டதைக் கண்ட வேடன் அதை எப்படியாவது உயிரோடு பிடிக்க வேண்டுமென்று எண்ணி மரத்தடியிலே சுற்ற ஆரம்பித் தான். இதைச் கண்ட கலர்ப்புற கலங்கிவிட்டது. ஆலமரத்துப் புறாக்களிடம் சென்று அபயங் கோரியது. அந்தப் புறாக்கள் "எங்களால் வேடனை எதிர்க்க முடி யாது' என்று கூறின. எப்படியோ கலர்ப்புற தன் வேதனைக் குரலை அதிகப்படுத்தி மரத்திலுள்ள சில புறாக் களை தன் வசப்படுத்திக்கொண்டது. இந்த நிலைமையை கரும்புறாவும், வெண்புறாவும் கண்டன. வல்லூறை எதிர்க்கும் வேலையோடு வேடனை விரட்டும் வேலை வேறு சேர்ந்துவிட்டதே; இதற்குக் காரணம் கலர்ப் புறாவின் செயல்தானே; கலர்ப்புறா இங்கு வராமலிருந்தால் இந்தப் புதுத் தொல்லை வராதே என்று வெண்புறா வருத்தப் பட்டது. அதற்குள் கலரீட்புறா, கரும்புறாவை தனியே அழைத்துச்சென்று ஏதோ பேசியது. இரண்டும் சேர்ந்து வேடனை விரட்டுவது, என்று திடீரெனத் திட்டம் தீட்டின. பிறகு கலர்ப்புறா, வெண்புறாவிடம் ஓடிவந்து "வேடனை விரட்ட நீயும் வா!" என்று கூப்பிட்டது. "வேடனை வெற்றிகொள்ள நான் வருகிறேன். நீ பிறகு வல்லூறை விரட்டிவிட்டு, ஆலமரத்தை புறாக்