22 ஆலமரத்து புறாக்கள் களின் தனி மாளிகையாக்கும் முயற்சியில் ஒத்துழைப் பாயா? என்று வெண்புறா, கலர்ப்புறாவிடம் ஒரு நிபந் தனை போட்டது. கலர்ப்புறா அதற்கு இணங்கவில்லை. மரத்தின் கீழ் நின்றுகொண்டிருந்த வேடன் 'புறாக்கள் கூடிக்கூடிப் பேசுவதைக் கண்டான். அந்தப் புறாக்களி டமே சொல்லி கலர்ப்புறாவைத்தான் பிடித்துக்கொள்ள லாம் என்று கருதி-புறாக்களைப் பார்த்து "ஓட்டு ஓட்டு கலர்ப்புறாவை " என்று கத்தினான். இறுதியாக வேடன் மரத்திலேறி, கலர்ப்புறாவை உயிரோடு பிடிக்கத் திட்டம் போட்டு ஏற ஆரம்பித் தான். கலர்ப்புறாவோ பறந்து சென்றால் வேடன் கணைக்கு இறையாவோம் என அஞ்சி, கரும்புறாவின் துணையோடும் வேடனை எதிர்க்கக் கிளம்பியது. கடைசி நேரத்திலும் வெண்புறாவுக்கு கலர்ப்புறா அழைப்பு விடுத்தது. உன்காரியத்தை மட்டும் சாதித்துக் கொள்ள முடியாது; நம் காரியமென்ன ?" என்று கேட்டது வெண்புறா. உடனே கரும்புரு, வெண்புறாவிடம், "ஏதோ ஆனது ஆகிவிட்டது; வேடனை விட்டால் நம்மையெல் லாம் கொன்று விடுவானே என்று உபதேசம் செய்தது. அது கேட்ட வெண்புறா, 'வேடனை எனக்கு வீழ்த்தத் தெரியும், அதற்காக கலர்ப்புறாவின் துணை எனக்குத் தேவையில்லை' என்று கூறிவிட்டது கம்பீர மாக! கரும்புறா வெண்புறாவைக் கோபித்துக்கொண்டது. கங்காணி என்றது. வெண்புறா அதற்காக அயரவில்லை.
பக்கம்:நாடும் நாடகமும்.pdf/22
Appearance