பக்கம்:நாடு நலம் பெற.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நாடு நலம் பெற களுக்குமுன் நீதிக் கட்சி, தமிழகத்தில் ஆண்டகாலத்தில், அரசாங்க உத்தியோகத்தில் இந்த வகுப்பு வாரி முறை புகுத்தப்பட்டது ஒரே இனத்தைச் சேர்ந்தவரன்றி, புலரும் இடம் பெறும் இந்த நிலை, இன்று கல்வி முறை யிலும் பின்பற்றப்படுகிறது. நூற்றுக்கு அறுபத்தொன்பது தாழ்த்தப் பட்டோருக்கு என அறுதியிட்டு, அதன் வழி செயலாக்கம் நடைபெறுகின்றது. எனினும் அதிலும் அரசாங்கமும் உயர்நிலையில் உள்ளவர்களும் அதிகாரி களும் தம் மனம் போன போக்கில் நடப்பதாகவும் அதற் கென நீதி மன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்படுவதாக வும் காண்கிறோம். 'எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை' என்று கம்பன் கூறியபடி, எல்லோருக்கும் எல்லாச் செல்வங்கள் அமைய வேண்டியதே. அதிலும் கல்வி அந்த வகையில் முக்கிய இடம் பெறுகிறது அரசாங்கம் அதற் கெனப் பல விதி முறை அமைத்து மாணவர் சேர்க்கையை வகைப்படுத்த நினைக்கிறது. எனினும் சில தனியார் நிறுவனங்கள் தம் வழியில் செல்வதையும் காண்கிறோம், இந்த நிலை மாறி எல்லோரும் கல்வி கற்கும் வாய்ப்பு உண்மையில் உண்டாவதே நாட்டுக்கல்வி நலம் பெறுதற்கு வழியாகும். முன், மாநில மொழிகள் போற்றா நிலையினை விளக்கி எழுதினேன். அக்குறையை அரசர்ங்கம் நினைத் தால் - உடனே செயல்படுத்தினால் அக்குறை நீங்கும். பள்ளி கல்லூரிகளில் பயிற்று மொழி தமிழ்தான் என்று தமிழ்நாட்டில் உறுதி செய்ய வேண்டும். தாய்மொழி தமிழ் அல்லாதார் அவரவர் தாய்மொழியினையே வேற்று மொழியினையே கொள்ளலாம் மொழிப் பாடத்துக்கு அதுவாக, பயிற்று மொழி தமிழாகவோ ஆங்கிலமாகவோ அமையலாம். அது மட்டுமன்றி, தமிழ்நாட்டில் தமிழ் வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/106&oldid=782351" இலிருந்து மீள்விக்கப்பட்டது