பக்கம்:நாடு நலம் பெற.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந்ாட்டுக் கல்வி நலமுற் 103 அளவற்ற நிலையில் அவை பெருகினாலும் அவற்றின் தரம் சிறந்ததாக உள்ளதா எனப் பலர் ஐயுறுகின்றனர். மத்தியில் உள்ள அனைத்திந்திய தொழில்கல்வி, மருத்துவக்கல்லூரி நிறுவனங்களும் மாநிலத்தில் உரிமை வழங்க உள்ள நிறுவனங்களும் வேண்டுவார் வேண்டு வதை வாரி வழங்கும் நிலையில் உள்ளமையின், இருக்க வேண்டிய நிலையில் இருந்து, சிலர் இயங்கவில்லை என அறிகிறோம். மேலும் அறிந்தாலும் பணம் பதவி போன்ற வற்றின் பரிந்துரையாலும் பிறவற்றாலும் செயலாற்ற முடியாது நிற்கின்றனர். எத்தகுதி இன்றேனும் பணம் தந்தால் எத்தகைய பாடமும் தரப்பெறும் என்பதைப் பற்றிப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. அது தவது என்று யாரும் மறுப்பார் இல்லை. சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக் கழகத்திலே துணைவேந்தர் இல்லா நிலையில் நிகழ்ந்த அவலநிலை பற்றி நாடே அறியும். இந்தக் கொடுமை கல்வியில் வந்தால் நாட்டுக் கல்வி நலம் பெறுவ தெங்கே? நன்கு தேர்ச்சி பெறாத மருத்துவர்கள் நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச்செயல்' என்ற வள்ளுவர் வழி நிற்கத் தெரியாமல் நோயாளிகளை வாடவிடு கின்றனர். அப்படியே பொறியாளர் தம் மேற்பார்வை யில் கட்டும் பல கட்டடங்கள், பாலங்கள் போன்றவை விரைவில் கெடுகின்றன எனவே அடிப்ப்டை நன்று அமையப்பெற்ற, ஆழ்ந்த கல்வி முறையினை வல்லார் வழி நாட்டில் பரவவைத்து வருங்காலச் சமுதாயத்தை வாழ வைக்க வேண்டியது அரசின் கிட மையும் மற்றவர் கடமையும் ஆகும். - இன்று கல்வி நலம் காணாத தாழ்த்தப்பட்டோர் கற்று உயரும் வழியில் பள்ளி, கல்லூரி, தொழிற்கல்லூரி, மருத்துவக் கல்லூரி போன்ற வற்றில் மாணவர் சேர்க்கை சாதி அடிப்படையில், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ முறையில் அமையச் சட்டங்களும், நீதிமன்ற வழிமுறை களும் பிறவும் அமைகின்றன. அறுபது எழுபது ஆண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/105&oldid=782349" இலிருந்து மீள்விக்கப்பட்டது