பக்கம்:நாடு நலம் பெற.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102. நாடு நலம் பெற நம் நாடு கல்வியில் பின் நோக்கி-மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பது உண்மை. தற்போது நூற்றுக்கு நாற்பத்திரண்டு பேர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் எனக் கணக்கெடுத்துள்ளனர். விடுதலை பெற்றபின், எங்கோ 18, 16இல் இருந்த நிலை மாறி இதற்கு உயர்ந்துள்ளமை போற்றுதற்குரியதே எனினும் இந்த நாற்பத்திருவரில் கையெழுத்துப் போட, கூட்டிப் ப்டிக்கத் தெரிந்தவர்கள் பாதியாகக் கழிவர் என்பர். எப்படியாயினும் எழுத்தறிவு இயக்கம் இந்த அளவு செய்தல் போற்றுதற்கு உரியதே! - இன்று நாட்டில் எழுத்தறிவில்லா நிலையைப் போக்க மத்திய மாநில அரசுகள் பெரும்முயற்சி செய்கின்றன. கோடி கோடியாகச் செலவு செய்கின்றன. ஆயினும் அதைச் செயல்படுத்துவோரில், ஒரு சிலர் தவிர்த்து,பெரும் பால்ோர் செய்யவேண்டிய பணிகளைச் செம்மையாகச் செய்யவில்லையே! அதனாலேயே வளரவேண்டிய வளர்ச் சியைக் காணமுடியவில்லை. அரசாங்கங்களும் பெருந் தொகைகளை ஒதுக்கிவிட்டோம் என்று விளம்பரம் செய் வதோடு அமையாது, களப்பணிகள் நன்கு நடைபெறு கின்றனவா என்பதைத் தக்கார் வழிக் கண்டு தெளித்து, குறையுளதேல் தீர்க்க முயலவேண்டும். மக்களுக்கு நலம் செய்வதற்கெனவே சட்டமன்றங்களையும் பாராளு மன்றத்தையும் அலங்கரிக்கும் உறுப்பினர்கள் தத்தம் தொகுதியில் அடிக்கடி சுற்றி உழன்று செயல் முறை களைக் காண வேண்டும். மத்திய மாநில அமைச்சர்களும் கூடிய வரையில் சுற்றி உழன்று செயல் பற்றிக் காண வேண்டும். இவ்வாறு அனைவரும் கலந்து செயலாற்று வார்களாயின் நாட்டுக் கல்வி நலம் பெறும் என்பது உற்தி. இன்று மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி அவை சார்ந்த பிற நிறுவனங்கள் தனியார் வழி ப்லப் பல வாகப் பல்கிப் பெருகுகின்றன. மக்கள் வேட்கை அறிந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/104&oldid=782347" இலிருந்து மீள்விக்கப்பட்டது