பக்கம்:நாடு நலம் பெற.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற 瓦0懿 இருந்து, அவர்கள் வீட்டு வேலைகளையும் செய்து, பல ஆண்டுகள் அவரோட கழித்துக் குருகுலவாசம் செய்த நாடு நம் நாடு. பேரரசர்தம் பிள்ளைகள் உட்பட்ட அவ்வாறு பயின்று பாடங்கள் மட்டுமன்றி அரசர்களுக்கு வேண்டிய போர்ப்பயிற்சிகள் போன்றவற்றையும் பிற வாழ்வியல் தன்மைகளையும் கற்றவர்களென அறிகிறோம் இன்று நூல் இல்லாமல், ஆசிரியர் இல்லாமல் முறையான வகுப்புகள் இல்லாமல்- எதுவும் இல்லாமல் எப்படியோ படித்தோ படிக்காமலோ பட்டம் பெறும் நிலையினையும் காண்கிறோம். அதிலும் தெளிந்த அனுபவப் பயிற்சியும் ஆய்வுகளச் சோதனைகளும் உடைய ஆசிரியர் பயிற்சி, உயர்ந்த அறிவியல் பட்டப் படிப்புகள் B.Ed,M Sc' போன்றன இவ்வாறு அஞ்சல் வழியே கற்றுத் தருவது எவ்வாறு பொருந்தும்? அவ்வாறு பயில்கின்றவர்கள் எங்கேனும் அலுவலகங்களில் எழுத்தாளராகவோ வேறு வகையிலோ பணியாற்றினாலும் கவலை இல்லை. ஆனால் அவர்கள் ஆசிரியர்களாகக் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் இடம் பெற்றால் அவரிடம் பயிலும் மாணவர் நிலை என்னாவது? அதிலும் நான் மேலே காட்டியபடி எதையும் முன் தயார் செய்யாது வகுப்புக்குச் செல்லும் நிலையில் அவர்கள் இருந்தால் மாணவர் என்னாவர்? இப்போதே நூற்றுக்கு ஐம்பது நாற்பது விழுக்காடு தேறும் பள்ளிகளும் கல்லூரிகளும் உள்ளன என்பர். சில பல்கலைக்கழகங்கள் தேர்வுநிலை குறைவாக இருப்பின் கூடுதல் எண்களை வாரி வழங்கும் முறையும் உண்டு, ஒரு காலத்தில் 27ம் அதற்கு மேலும் (34வரை) உள்ளனவற்றை எல்லாம் முப்பத்தைந்தாக்கி, அதன்வழி அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற ஒரு நிலையினை நான் அறிவேன். egg & TiåløGud “Moderation Board' என்று அமைத்து இத்தகைய செயல்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கின்றது என்பது வேறு. இவ்வாறு எல்லாம் செல்வது கல்விக்கு நலம் சேர்ப்பதாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/103&oldid=782345" இலிருந்து மீள்விக்கப்பட்டது