பக்கம்:நாடு நலம் பெற.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 நாடு நலம் பெற செய்ய, நிறைய ஒய்வு நேரங்கள் - பள்ளி ஆசிரியர்களை விட அதிகமாக-தரப்பெற்றும் அவர்கள் ஒன்றும் பாடங் களை ஆய்ந்து அறிந்து தெளியாது, வெறும் புத்தகங் களைக் வைத்துப் படிப்பதும் அதையே குறிப்பாக மாண வர்களை எழுதிக் கொள்ளச் சொல்வதும் அன்றாட நிகழ்ச்சிகளாக உள்ளன. அக்குறைபாடுகளைச் சுட்டிச் காட்டினாலேயே அவர்களுக்கு ஆத்திரமும் கோபமும் வரு வதையும் காணமுடிகின்றது. ஆங்கிலத்தில் கோல்டு ஸ்மித் (Gold Smith) போன்றோர் ஆசிரியர்தம் இலக்கணங் களை வகுத்துள்ளது போலவும் நல்லாசிரியர்கள் அமைய வேண்டும். இதற்கான வழிமுறை அரசு உடன் அலசி ஆராய்ந்து தேர்ந்து தெளிந்து கடைப்பிடிக்க வேண்டும். இன்றேல் மேனிலைக் கல்வி பயனற்றதாகவே முடியும். பள்ளி, கல்லூரிகளில் சேர இயலாதவர்கள் பயிலும் வகையில் இன்று அஞ்சல் வழிக்கல்வி முறை எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் ஏற்று மேற்கொள்ளப் பெறு கின்றது. ஒவ்வொரு பல்கலைக் கழகமும் போட்டி இட்டு இச்செயலைச் செய்கின்றது. அதற்கென எப்போதோ ஒருமுறை இரண்டு நாட்கள் (சனி ஞாயிறு) யார் யாரையோ கொண்டு வகுப்புகள் நடத்துகின்றன. கத்தை கத்தையாக அச்சிட்டும் படி எடுத்தும் பாடங்களை அனுப்பி வைக்கின்றன. எனினும் எடுத்துக் கொண்ட பாடத்தை நன்கு முற்றக் கற்க முடியுமா? எங்கோ ஒரு சிலர் உண்மையிலேயே ஆர்வமுடையவர் நன்கு பயில லாம். ஆனால் பெரும்பாலானோர் தம் வேலைகளுக்கு இடையில் முற்றக் கற்றவராக மாட்டார்கள். சில பல்கலைக்கழகங்கள் சேர்பவர்கள் எல்லோரையும் தேர்ச்சி பெற்றவர்களென அறிவிப்பதாகவும் அதனால் அதில் பலர் சேர்வதாகவும், அந்தவ்கையில் அவை பெரும் பொருள் ஈட்டுவதாகவும் ஒரு சிலர் கூறக்க்ேட்டிருக் கிறேன். இது உண்மையாயின் வருந்த வேண்டியதே. காலை முதல் மாலை வரையில் குருவின் வீட்டிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/102&oldid=782343" இலிருந்து மீள்விக்கப்பட்டது