பக்கம்:நாடு நலம் பெற.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நாடு நல்ம் பெற AA eeiTA AeiAAASASASS SSSSSSMSS -- - தருவதர்கச் சட்டம் செய்தும் பயன் விளையவில்லை. அர்சியல் சாசனம் செய்தோர். அது அமுலாக்கப் பெற்ற பத்து ஆண்டுக்ளில் ஆரம்பக் கல்வி எல்லாக் குழந்தை களும் (6-14) பயின்றாக வேண்டும் எனச் சட்டம் செய்தது (சாசனத்தின் 45 ஆவது பகுதி) எனினும் ஐந்து பத்தாண்டுகள் நிறையும் நிலையிலும் அது நிறைவேற வில்லை. பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் பல்கிப் பெருகியபோதிலும் எல்லோரும் கற்றவர் என்று கூறிக் கொள்ள இயலவில்லை. இந்தக் கொடுமை நீக்கப் படுதற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியம். குழந்தை களை வேலைக்கு ஏற்று ஊதியம் அளிப்போரும் சற்றே நின்று நினைத்து, அந்த அவல நிலையை நீக்கினால் ஒருவேளை நாம் வேண்டிய பயன் கிட்டும். நாட்டுக் கல்வி தலமுறும். எல்லோரும் எழுத்தறிவு பெறவேண்டியதுதேவையே. ஆனால் அந்த அறிவு, வள்ளுவர் கூறியாங்கு வையத்தை வாழ வைக்கும் வகையில் அமைய வேண்டும். அந்தவகை யில் வாணிபமாகவுள்ள நம் பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் பள்ளிகளையும் நீக்கி, நேரிய வழியில் நல்ம் காண்பவற்றை ஊக்கி, அரசாங்கம் ஒரளவேனும் நல்ல பல பள்ளி, கல்லூரிகளை நிறுவி, நாட்டுக் கல்வியை நல்ம் பெற்றதாகக் காணும் வழியைக் கடைப்பிடிக்க வேண்டும். எதை இழந்தால்- கல்வியின் நலத்தினைபயனை இழந்தால்- அதனைத் திரும்பப் பெறுதல் அரிது. அது மட்டுமன்றி, கல்வியே நம்மை உலக நாடுகளில் உயர்ந்த நாடாக்கிக் காட்டும். படையும் பணமும் ஆட்சியும் பிற மாட்சியும் எவ்வளவு இருப்பினும் அவை பிற, நாடுகளின் முன் தலைதுாக்காது. யாதானும் நாடாமால் ஊர்ாமால் என் ஒருவன் சாந்துணையும் கல்லாதவாறு என்றும் கற்றேர்க்குச் சென்ற விட மெல்லாம் சிறப்பு என்றும் கூறியபடி எங்கும் எல்லர் நாடுகளிலும், கற்றவர் சென்று நாட்டின் பெருமையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/108&oldid=782354" இலிருந்து மீள்விக்கப்பட்டது