பக்கம்:நாடு நலம் பெற.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 123 பெருமலையும் அதன் தொடர்களும் பஃறுளி என்னும் பேராறும் இருந்த பகுதிகள் கடலால் கொள்ளப்பெற, அவற்றை இழந்த பாண்டிய மன்னன் புதிதாகத் தோன்றிய இமயப் பெருமலையினையும் கங்கைப் பேராற்றையும் தனதாக்கிக் கொண்டு, எஞ்சி நின்ற தமிழகத் தலைநகரா கிய மதுரையில், தெற்கே இருந்து அரசாண்டான் என்பது அன்று வாழ்ந்த இளங்கோவடிகள் கண்டறிந்த உண்மை அல்லவா! அதைப் பொய் என்று தள்ளமுடியுமா? அதனை வரலாற்றுக் காப்பியம் என்றல்லவா வரலாற்று ஆசிரியர் கள் கொள்ளுகின்றனர். அந்தத் தெற்கே இருந்த நாடுகளில்தான் தென் மதுரையில் முதல் தமிழ்ச் சங்கமும் கபாடபுரத்திலே இரண்டாம் தமிழ்ச் சங்கமும் இருந்தன என அறுதியிட்டுக் கூறுகின்றனர். வால்மீகி, இராமாயணம் நடைபெற்ற காலத்தே வாழ்ந்தவர் - சிலப்பதிகாரம் நடைபெற்ற காலத்து இளங்கோவடிகள். போல, ஆம்! அவர்தம் இராமாயணத்தில் கபாடபுரத்தைக் குறிக்கின்றார். வடமொழி இராமாயணமும் தமிழ்ச் சிலப்பதிகாரமும் பொய்க் கதைகளா? ஆழ்ந்து சிந்தியுங்கள். அந்தத் தென் தமிழ்நாட்டில்தான் இரணியனும், இராவணனும், சூரபதுமனும் வாழ்ந்தார்கள் என இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. கம்ப இராமாயணத்திலே தான் விபீடணன் வாயிலாக இரணியன் அறிமுகப்படுத்தப் பெறுகின்றான். ஆம்! அவர் வாழ்ந்த பொன் நகரங் களும், நாடுகளும், ஆறுகளும் மலைகளும் ஏன் அழிந்தன? அங்கெல்லாம் ஏன் பூகம்பங்கள் உண்டாகி அவற்றை அடியோடு அழித்தன? எண்ணிப்பாருங்கள். 'இழந்த லெமூரியா கண்டம்'என்று ஆங்கில நூலும் 'குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு' என்ற தமிழ் நாலும் இந்த இந்துமாக் கடலில் ஆழ்ந்த நாடுகளைப் பற்றி நன்கு விளக்குகின்றன. இயற்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/125&oldid=782392" இலிருந்து மீள்விக்கப்பட்டது