பக்கம்:நாடு நலம் பெற.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 நாடு நலம் பெற கள் பொய்யா? யார் வேண்டுமானாலும் எதை வேண்டு மானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பது இன்றைய அரசியலில் - ஏன்? சமுதாயத்திலும் பழக்கமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஆழ்ந்த ஆய்ந்து அறிந்து தெளிந்த ஆய்வாளர்கள் தவறான கருத் துக்களைத் தூவினால் அவை உலகுக்கே கேடு விளைவிக் குமே! குமரிமுனைக்குத் தெற்கும் விந்தியத்துக்கு வடக்கும் பல கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையினை நில நூல் ஆய்வாளர்கள் தெள்ளத் தெளியக் கூறியுள்ளார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குமரிக்குத் தெற்கே, கிழக்கே ஆஸ்திரேலியா தொடங்கி, மேற்கே மெடகாஸ் கர் வரையில் பரந்த நிலப்பரப்பு இருந்தது என்றும் அது நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த தென்றும் அவை ஊழிகள் சிலவால் மெள்ள மெள்ள அழிந்தன என்றும் தமிழ் நூல்கள் சாற்றுவன சரியே என அத்துறைகளில் வல்ல நல்ல மேலை நாட்டு ஆய்வாளர்கள் கூறியுள்ளனரே! அண்மையில் இந்துமகா சமுதத்திரத்தில் அகழ்ந்தாய்வு செய்து, அதற்குச் சான்றும் உண்டு என்று கண்டனரே. அப்படியே இமயம் கடலுள் ஆழ்ந்திருந்த மைக்கு, அம்மலையில், இடையில் பூமிக்குச் சில ஆயிரம் அடிகள் உயரத்தில் கடல் வாழ் உயிரினத்தின் எலும்பு களும் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டனவாகக் காட்டியுள்ளனரே. திரு.வி.க. அவர்கள் இமயம் கடலுள் ஆழ்ந்த காலத்தே' என்று தன் ஒரு கட்டுரையினையே தொடங்கியுள்ளார். பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கை இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி' என்று சிலப்பதிகாரம் தன் மதுரைக் காண்டத்தைத் தொடங்குகின்றது. குமரி என்னும் ஆறும் குமரி என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/124&oldid=782390" இலிருந்து மீள்விக்கப்பட்டது