பக்கம்:நாடு நலம் பெற.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 121 வாழ்வு அமைதியாக நடைபெறுகின்றது என்றால்இயற்கை உற்பாதங்கள்- மனிதர்தம் செயற்கைக் கொடுமைகள் இல்லாமல் வாழ்கின்றது என்றால் அத்ற்கு அடிப்படைக் காரணம் அந்நாட்டு மக்களேயாவர். இப்பாடலில் எவ்வழி நல்லவர் ஆடவர்' என ஆண்பாலை மட்டும் குறித்தாலும், ஒரு மொழி ஒழிதன் இனம் கொளற் குரித்தே' என்ற இலக்கண முறைப்படி இது மகளிரையும் உள்ளடக்கியதேயாம். எனவே ஒரு நாட்டில் ‘வாழும் மக்கள் அனைவரும், ஆண், பெண் இரு பாலரும் நேரிய வாழ்வின் அடிப்படையிலேயே வாழும் நாடும் அதன் வளமும் அமையும் எனக் கொண்டனர், சான் றோர். அது முழுக்க முழுக்க உண்மையும் கூட. இதனை அறியின் இன்றைய நாட்டின் கொடுமைகளுக்கு மூல காரணம் நன்குதெளிவாகும். அண்மையில் மராட்டிய, கர்நாடக ம்ாநிலங்களில் உண்டாகிய பூகம்பங்களுக்கு அத்துற்ையில் வல்லவர் ஏதேதோ காரணங்களைக் காட்டினர். ஆனால் எவரும் அது தோன்றுவதற்கு முன் அதனைத் தேர்ந்தறிய முடியாது என்றே கூறினர். இரண்டினையும் எண்ணிப் பார்க்கல்ாம். தொலைக் காட்சியில் இந்தியா எங்கோ 'தெற்கே அண்டார்டிக்காவில் இருந்து பல கோடி ஆண்டு களுக்கு முன் மெல்ல மெல்ல வடக்கே நகர்ந்து ஆசியாவின் பிற பகுதிகளோடு இணைந்தது எனக்காட்டினர். அதன் வட எல்லையில் இமயம் இல்லை ஆக், இமயத்தொடு இந்தியப் பகுதி கலந்தது என்பது அவர்கள் எண்ணம் போலும். இந்த ஆய்வு சரிதானா? முடிவானதுதானா? இவர்கள் கூற்றின்படி இன்றைய குமரிமுனைக்குத் தெற்கே வேறு நாடுகள் - நிலப்பகுதிகள் இல்லை என்பதுதான் முடிவு போலும். ஆனால் இதுவரை இந்துமகாசமுத் திரத்தை ஆய்ந்த மேலை நாட்டு அறிஞர்களும், நம் பண்டைத் தமிழ் இலக்கியங்களும் கண்ட-கூறிய உண்மை ந்ள்-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/123&oldid=782388" இலிருந்து மீள்விக்கப்பட்டது