பக்கம்:நாடு நலம் பெற.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் "எவ்வழி நல்லவர் ஆடவர் . . - அவ்வழி நல்லை வாழிய நிலனே'! (புறம் 187) என்றார் சங்கப் புலர்ை ஒளவையார். இந்த உண்மை என்றும் உண்மையாக உலகில் அமை கின்றது. ஏதோ சங்க காலப் புலவர் சொன்னார் நமக் கென்ன என்று நாம் இருப்போமானால் நம்மை நாம் அழித்துக் கொண்டவர்களாவோம். சொல்லால் மாயா ஜாலம் காட்டும் இந்த நாளைப் போல் அந்தக் காலப் புலவன்- சங்க காலத்தில் வெற்றுப் பாட்டுப் பாட வில்லை; அப்படிப் பாடிஇருப்பானாயின் அவையும் இன்று புற்றீசல் போலத்தோன்றி மறையும் பாடல்கள்ைப் போன்றே, என்றோ மறைந்திருக்கும். கவிதை' என்பது காலத்தை வென்று வாழ்வது என்ற உண்மையினை நம் நாட்டுப் புலவர்களும் அறிஞர்களும் மட்டுமன்றி, மேலை நாட்டு அறிஞர்களும் கவிஞர்களும் அறுதியிட்டுக் காட்டி யுள்ளனர். அவை காலத்தை வென்று மட்டும் வாழி வில்லை. காலம்தொறும் வாழும் மக்களுக்கு நன்ன்ெறி. காட்டி, பொய்ந்நெறி போக்க வற்புறுத்தி வாழ்வினை வளமாக்கும் வகையிலும் உதவுகின்றன. ஆம்! இன்றும் அச்சொற்கள் மெய்யாகவே உள்ளன. ஒளவையார் பாடிய அப்பாடல்பொருள் மொழிக் காஞ்சி'என்ற துறை யின் பாற்படும். அதன் பொருள் பொதிந்த மொழி இன்றும் பொய்யாவதில்லை. - நாட்டுக்கு வரும் நலம், தீங்குகளை அக்காலப் புலவர் கள் நன்கு அறிந்து சொன்னார்கள். அதன் விளைவே இப்பாடல். ஒரு நாடு நலமுற்று, உயர்வுற்று, சமுதாய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/122&oldid=782386" இலிருந்து மீள்விக்கப்பட்டது