பக்கம்:நாடு நலம் பெற.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற 119 உணவினை உண்பதால் இந்நாட்டில் பலரும் நோய் இன்னதென அறியா வகையில் வாழ்கின்றனர். இவ்வாறு தமிழ் நலத்திைத் தளரா வகையில் போற்றும் இம்ம்க்களுக்கு இங்கே தமிழ்நாட்டில் வாழும் நாம் பலவகைகளில் உதவி செய்யக்க்டமைப் பட்டிருக் கிறோம். இத்தீவில் நன்கு படித்துள்ளவர் அனைவரும். எனவே அவர்கள் படிப்பதற்குத் தேவையான நூல்கள் தமிழில் அங்கே தக்கவர்களுக்கு- தெரிந்தவர்களுக்கு அனுப்பிப் பலரும் படிக்க வழி காணலாம். அரசாங்கம் அச்சிடும் நூல்களில் சில படிகளை- தான் கட்டாயமாகப் பெறுவது போன்று இதற்கெனப் பெற்று, 'மெளரிஷயஸ்' அரசுக் கல்வித்துறைக்கு அனுப்பி, அனைவருக்கும் பயன் படுத்தச் செய்யலாம். பல அறிஞர் தற்போது இங்கே வந்துதம் செயற்பொழிவின் வ்ழியும் பிற வகையிலும் இந்த மக்கன்ஸ் ஊக்குவிக்கின்றனர். எனினும் இன்னும் ப்லர் சென்று பழகி வாழும் வகையில் கலந்து ஒன்றி உறவாடி அவர்தம் உயிர் தளிப்ப ஆவன செய்ய வேண்டும். தமிழ் பயின்றுவிக்க நல்ல தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள். தேவைப்படுகின்றனர், நல்ல ஊதியம் உண்டு. எனவே பல ஆசிரியர்கள் சென்று அத்தீவில் கல்வி நலம் காணலாம். தமிழ் நாட்டு அரசாங்கமும் நல்லாசியர் கள்ை அனுப்பி உதவலாம். அவர்களுக்குச் செல்வம் தரத் தேவையில்லை. தமிழ்நாட்டிலேயே மங்கும் மொழி, கலை, கல்வி, பண்பர்டு இவற்றை என்றும் காக்கும் வகையில் வாழ்ந்து வளர்த்துவரும் இத்தீவின் தமிழருக்கு வேண்டுவன்த வேண்டிய வகையில் ஈந்து "இதோ ஒரு தமிழ்நாடு' - என்று நாம் உலகுக்குக் காட்ட முற்பட வேண்டும். "சுட்ர் விளக்காயினும் நன்றாய் விளககிடத் தூண்டு கோல் ஒன்ற் வேண்டும்' என்று ப்ெரிய்வர்கள் கூடியபடி சுடர் விளக்காக ஒளிரும் தமிழ் விளங்கும் வகையில் வாழும் இத்தீவின் மக்களுக்குத் தூண்டு கோலாகத் தமிழ் நாடும் அதன் மக்களும் செய்ய வேண்டிய அனைத்தையும் உடனே செய்ய முற்பட வேண்டும். முயன்று உதவி 'மெளரிஷியஸ்' -மக்கள் தமிழ் உளத்தை- வளத்தைவற்றாத பண்பினை வளர்ப்பீர்களாக! வாழ்க 'மெளரிஷயஸ் வளர்க அதன் தமிழ் நலம்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/121&oldid=782384" இலிருந்து மீள்விக்கப்பட்டது