பக்கம்:நாடு நலம் பெற.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நாடு நலம் பெற தேவார திருவாசகப்பாக்களைப் பாடிக்கொண்டிருக்கும். "அவனே அவனே என்பதைக் காட்டிலும் சிவனே சிவனே என்று சொல்' என்று சொல்வது அங்கே நேரின் கண்டு கேட்டதாகும். சமயம், மொழி, பண்பாடு இவையன்றிச் சமுதாய நெறியிலும் இத்தமிழ் மக்கள் சிறப்புற வாழ்ந்தனர். வாழ்கின்றனர். ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமர்னமாக வாழ்வம் இந்த நாட்டிலே’ என்று பாரதி இந்த நாட்டு மக்களைப் பற்றித்தான் பாடினானோ எனக் கொள்ள வேண்டியுள்ளது. ஆண் பெண் சமத்துவமட்டுமன்றி, சாதியாலும், பிறவற்றாலும் உள்ள வேறுபாடும் இங்கே தலைகாட்ட வில்லை!"எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ எனவே வாழ்ந் தனர், உயர் பதவியில் உள்ளவர்கள்- அமைச்சர்கள் "உட்புட் சாதாரண மக்களொடு மக்களாகவே பழகி நிற்கின்றனர். பதவி, பட்டம், செல்வம் முதலியவற்றால் பெறும் 'யான் எனது' என்னும் செருக்கும் தாம்தான் உயர்ந்தவர்' என்ற உணவும் இங்கு காண முடியாதவை. எங்களைப் போன்று புதிதாக- விருந்தினராக வந்தவ ரோடு மட்டுமளறி, அந்ந்ாட்டு மக்கள் அனைவரோடும் எளிய முறையில் அவர்கள் பழகிய காட்சி என் கண் முன் நிற்கிறது. இந்த நாட்டில் பெண்களுக்கு மணம் பேசும் போது Dowry என்னும் வரதட்சனைக் கொடுமை மருந்துக்கும் காண முடியாது. காதல் மணங்களும் உண்டு பெற்றோர். வழிக் காணும் பெருமணங்களும் உண்டு. அனைத்தும் எளிய தமிழ் முறையிலேயே நடைபெறும். உணவு வகையிலும் மக்கள் வள்ளுவர். தேரையர் போன்றோர் கூறியாங்கு நோய்வாரா உணவினை, பதத் தொடு, அளவொடு உண்கின்றனர். தயிரும், பாலும் மோரும் இன்றி அவர்கள் உணவு அமையாது. நான் தயிர் ம்ோர் விட்டுக்கொள்வதில்லை என்று பேசும் சிலர்தம் சென்னை நாகரிக்ம் அங்கே கிடையாது. இந்தத் தயிரும் மோரும் நெய்யும் மனித வாழ்வில் முக்கியமானவை, அதன்ாலே இறைவன் 'ஆனைந்தும் ஆட்டுகந்தான்' என்று பாராட்டப் பெறுகின்றான். இத்தகைய தேவையான் அளவறிந்த உணவினைப் பசித்துப் புசிக்கும் நல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/120&oldid=782382" இலிருந்து மீள்விக்கப்பட்டது