பக்கம்:நாடு நலம் பெற.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற 117 தொறும் அவர்கள் வழிபடும் தெய்வத்திருக்கோயில்கள் உள்ளன- பொதுவாகக் கூடும் சமுதாய மன்றங்கள் அத்திருக்கோயில்களை அடுத்தே உள்ளன. இவ்வாறு ஊர் தொறும் தம் சமயம், கல்வி, மொழி, பண்பாட்டு ஆகிய வற்றை வளர்ப்பதோடு, அரச உடைமையாகிய தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றிலும் தமிழ் முழக்கம் இருந்து கொண்ட இருக்கும் நிலையில் செயலாற்றுகின்றனர். நான் உலக தமிழ் மாநாட்டிற்குச் சென்ற போது அந்த நாட்டுக் கல்வி அமைச்சரே ஒரு தமிழர்தான். இத்தகைய தமிழ் உள்ளம் வாய்ந்த தமிழ் மக்களே உலகத் தமிழ் மாநாட்டை இங்கே நடித்தினர். பல நாட்டினர் அதில் பங்கேற்றனர். தமிழ் நாட்டிலிருந்து அரசுச் சார்பில் சென்றவருள் நானும் ஒருவன். இதன் பக்கத்தில் உள்ள சிறு சிறு தீவுகளிலும் பெரும்பாலாகத் தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதை அம்மகாநாட்டில் அவர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்ட போது கண்டு மகிழ்ந்தேன், நான் ஒரு சில நாட்களே அங்கே தங்கினேன். ஆயினும், அத்ற்குள் கண்ட ஊர்கள் பல - கோயில்கள் பல - கலந்து கொண்ட கூட்டங்கள் பல. எங்கு நோக்கினும் உண்மைத் தமிழர்தம் உளத் தொண்டும் உரத்தொண்டும் அறத்தொண்டும் அறிவுத்தொண்டும். காட்சி அளித்தன. ஆடவர் முகத்தில் நீறில்லா நெற்றி பாழ்' என்று கூறத் தேவையில்லா வகையில் நீறும் சந்த்னப் பொட்டும் தெளிவாக விளங்கின. பெண்களோ. நம் தமிழ்ப் பண்பாட்டில் பழைய நெறி முறை வழாமல் புடவை அணிந்து-பெர்லிவுடன் இருந்தனர். முகத்தில் சிறக்க மஞ்சள் பூசி, நெற்றியில் நீறும் பொட்டும் இட்டு தம் பண்ப்ாட்டுனைக் கட்டிக் காத்தனர். எங்கும் பள்ளி கள் மிக்க இருந்தமைய்ால் அவற்றுள் பலரும் பயில, பெண்கள் உட்படக் கற்று, யாரும் படிக்காதவர்களே இல்லை என்னுமாறு கல்வி வளம் பெற்றிருந்தது. ஆம்! தமிழ் கல்வியே- உடன் ஆங்கிலம். அவர்கள் வாய் 'நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நம்சிவாயவே' என்று சுந்தரர் கூடியவாறு எப்போதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/119&oldid=782378" இலிருந்து மீள்விக்கப்பட்டது