பக்கம்:நாடு நலம் பெற.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நாடு நலம் பெற பற்றிய கழகங்களும் பல தோன்றி வளர்ந்தன அக்காலத் திலேயே பல தமிழர்களை அரசாங்க உயர் பதவிகளில் அமர்த்தி அவர்கள் வழி நாட்டு ஆட்சி முறையினையும் நாட்டு நலனையும் ஆங்கிலேயர் போற்றி வளர்த்தனர் எனலாம். இந்த நூற்றாண்டின் இடைக்காலத்தே உலகெங் கனும் உள்ள நாடுகளில் உரிமை வேட்கை மீதுார இந்தியாவும் பிற நாடுகளும் உரிமை பெற்றமை போன்றே, இச்சிறு தீவும் 1968ல் உரிமை பெற்றது. ஆங்கிலேயர் தம் ஆட்சி முறையும் பிறவும் இங்கே பெரும் பாலராக வாழ்ந்த தமிழர்களை ஆளும் நிலையில் உயர்த் தியமையால் நாட்டினைச் சிறக்க ஆளும் பொறுப்பினை இவர்கள் மேற்கொண்டனர். இங்கே தமிழர்களே அன்றி வேறு மொழியாளர் - இந்திய மக்கள் - வேறு பலர் வாழ்ந்தனர்- வாழ்கின்றனர், பல சமயத்தவர்- பல மொழியாளர்கள் இருப்பினும் தமிழர்தம் யாது ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கைப்படி, யாரிடத்திலும் வேற்றுமை காட்டாது அனைவரையும் தழுவி ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். அதே வேளையில் தம் சமய நெறி, பண்பாடு, கல்வி, கலை இவற்றின் நிலை கெடாது மேன்மேலும் வளரப் பாடுபடுகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை கண்டு அதே வேளையில் தம் தனித்தன்மை கெடாது வாழும் பெருஞ்சிறப்பு அவர் களுடையது. - "எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று விண் முட்டப் பேசி, எங்கும் ஆங்கிலத்தை வளர்க்கும் நம் தமிழ் நாட்டை போலன்றி, இங்கு வாழும் தமிழர்கள் உண்மை யில் எங்கும் தமிழ் முழங்க, வழங்க சிறக்கப் பாடுபடு கின்றனர். ஊர்தொறும் தமிழ்ப் பள்ளிகள் பலப்பல உள்ளன- ஊர்தொறும் தமிழ்ச் சங்கங்கள் உள்ளன-ஊர் தொறும் கலை, பண்பாட்டு மையங்கள் உள்ளன. ஊர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/118&oldid=782376" இலிருந்து மீள்விக்கப்பட்டது