பக்கம்:நாடு நலம் பெற.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற II.5 அன்று தமிழ் நாட்டில் இருந்த பிரிந்த இந்தச் சிறு தீவு ஏறக்குறைய பதிநைந்தாம் நூற்றாண்டு வன்ர. பார்ப்பாரற்று இருந்தது எனலாம். மேலை நாட்டினர். உலகெங்கணும் உள்ள நாடுகளில் நம் வாணிபத்தையும் வாழ்வையும் பெருக்க முயன்ற பதினைந்து, பதினாறாம். நூற்றாண்டுகள் தொடங்கிப் பல நாடுகள் அவர்களால் கொள்ளப்பெற்றன. அவற்றுள் அமெரிக்க்ாவும் ஒன்று. இந்திய மண்ணில் முதல் முதல் கால் வைத்த போர்ச்சுசீய மக்களே இந்த ம்ோரிசு நாட்டையும் முதல் முதல் கைப் பற்றினர். அங்கு அவர்தம் ஆட்சியையும் ஊன்ற ஆவன கண்டனன். எனினும் இந்திய நாட்டில் அவர்கள் நில்ை பெறாதது போன்றே, இங்கும் அவர்கள் நிலை பெற வில்லை 1735ல் பிரஞ்சுக்காரர் இச்சிறு தீவினைக் கைப் பற்றினர். இதை வளமாக்கவும் முயன்றனர். எனினும் மக்கள்- செயலாற்றத் தக்கவர் அங்கே இன்மையின் அவர்தம் ஆதிக்கத்தில் தமிழ் நாட்டில் இருந்த புதுச்சேரி: சாரைக்கால் பகுதியிலிருந்து பல தமிழர்களை அங்க்ே குடியேற்றி, இந்நாட்டை வளம்படுத்தி அவர்களையும் வாழச் செய்தனர். தமிழர் பிற் காலத்தில் முதன் முதல் குடியேறியது அக்காலமே. - பிரஞ்சு ஆதிக்கமும் அங்கு ஒரு நூற்றாண்டு வரை கூட நிலைபெறவில்லை. 1810ல் இதை ஆங்கிலேயார் கைப்பற்றினர். அவர்கள் தமிழ் நாட்டின் பல பகுதி களிலிருந்தும்- சிறப்பாகத் தஞ்சை மண்ணிலிருந்தும் பல தமிழர்களை இங்கே குடியேற்றி நாட்டை வளமாக்கின்ர். ஆங்கிலேர் தம் கொள்கைப்படி பிற மதத்தினர்மொழியினர் இடைத் தாம் புகுத்து வலிய மாறுபாடு செய்யா நிலையில், இங்கும் வந்த தமிழர் வாழ்வில், வழி பாட்டில், பண்பில், கல்வியில் தலை இடாது அவற்றை வளர்க்கவே உதவினர். தமிழருள் பெரும்பாலோர் சைவர் களாக உள்ளமையின் அவர்தம் சமயக் கோயில்கள் பல உண்டாயின. கல்வி பற்றிய கூடங்களும் கலை, பண்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/117&oldid=782374" இலிருந்து மீள்விக்கப்பட்டது