பக்கம்:நாடு நலம் பெற.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நாடு நலம் பெற காட்டிலும் ஆங்காங்கே தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு: தமிழ்க்கலை இவை போற்றி வளர்க்கும் நிலை கண்டு, அவ்வப்போது நான் எழுதிய நூல்களில் அவை பற்றி விளக்கமாக எழுதியுள்ளேன். எனினும் நான் 1990இல் தொடக்கத்தில் சென்ற நாடு ஒன்றே இன்று என் கண் முன் நிற்கின்றது. அதுதான் இந்த மகா சமுத்திரத்தின் தென் மேற்கு கோடியில் ஆப்பிரிக்கா நாட்டுக்கு அருகருகில் உள்ள மோரிசு ஆகும்-மெளரீஷ்யஸ்' என்ற சிறு தீவாகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்- இமயம் கடலுள் ஆழ்ந்த காலத்தே, குமரிக்குத் தெற்கு தமிழ் நாடு பரந்து விரிந்த நிலையில், நாற்பத்தொன்பது நாடுகளாக நிலவி தமிழில் முதல் இடைச் சங்கங்களை வ்ளர்த்தென அறிகிறோம். வரலாறு, நில நூல் ஆய்வு, பிற அனைத்தும் இதை வலியுறுத்துகின்றன. அத்ன் எல்லை மேற்கே மெடகாஸ்கர் தீவு தொடங்கி, கிழக்கே ஆஸ்திரேலியா வரையில் பரவி இருந்ததெனவும் கூறுவர். அந்தப் பெரும் கும்ரிக்கண்டம் (லெமுரீயா கண்டம் என்று ஆராய்ச்சி யாளரால் அழைப்படுவது) அழிந்த போது சிறுசிறு துளிகள்- துண்டுகள் விடப்பெற்றிருக்கலாம். அவற்றுள் ஒன்றே இந்த மெளரிஷயஸ்' என நான் முடிவு செய் தேன். 1990இன் தொடக்கத்தே உலகத்தமிழ் மாநாட்ட்ை நடத்திய பெருமை அத்தீவில் வாழ் தமிழர்களுக்கே உண்டு. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே நான் வான் வழியே அந்த நாட்டுக்குச் சென்றேன். அதன் வளத்தையும் அதனை வளம்படுத்தி, அதே வேளையில் தம் தமிழ்ப் பண்பும், மொழியும், கலையும், பிறவும் ஓம்பி வாழும் தமிழ் மக்களைக் கண்ட நிலையில் இங்கு ஒரு தமிழ் நாடு உணடு' என எண்ணி மகிழ்ந்தேன். அதே . ಶ್ಗಿಸಿ அந்நாட்டு வரலாற்றையும் அறிந்து மகிழ்ந் தன. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/116&oldid=782372" இலிருந்து மீள்விக்கப்பட்டது