பக்கம்:நாடு நலம் பெற.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நாடு நலம் பெற உண்மையைக் கூறுகின்றது எனக் காண்கின்றோம். கூறும் உண்மை இதுதான், உலகில் மழை இல்லாது வற்றி, குடிக்கும் தண்ணீருக்கும் மக்கள் தவித்தாலும் அன்றிப் பெருமழை பெய்து பேரழிவை உண்டாக்கினா லும் அந்த நாட்டை ஆளுபவரே அதற்குக் காரணம் ஆவர். அப்படியே கடல் வளமும் பிற வளங்களும் காட்டு, வளமும்-நாட்டு வளமும்-குன்றினாலும் அதற்கு அவர்களே காரணமாவர். மேலும் இயற்கையாக அதற்கு வேண்டிய விண்ணும் மண்ணும் இவற்றுள் அடங்கிய பஞ்சபூதங்களும் இயற்கையாகத் தாம் தாம் இயற்ற வேண்டிய நிலை மாறித் திசை கெட்டு நடுங்கிப் பிளந்து வேறுபட்டு நிற்பினும் அதற்கும் நாடாளும் காவலரே அடிப்படைக்காரணம் என்கின்றனர். எனவே, நாட்டில் பெருமழை பெய்தாலும், வற்றி வரண்டாலும், பூகம்பங் கள் பிற கொடுமைகள் நிகழ்ந்தாலும் பதில் சொல்ல வேண்டியவர்கள் நாடாள்பவர்களே. வெறும் கண் துடைப்பாகத் துயர்துடைக்கும் பணியினால்-அப்பணி யில், இன்றைய நிலையில், செலவாகும் பெருந்தொகையில் பாதிகூடப் பாதிப்பவரைச் சென்று சாருமோ என்ற ஐயத்திடை வாழும் மக்களை, ஆளுபவர்கள் ஏமாற்றலாம். ஆனால் இயற்கையினையும் அதற்கும் மேம்பட்ட-அந்த இயற்கைக் கோள்களையும் நம்மையும் இயக்கும் இறைவ னையும் யாரும் - எந்தப் பதவியில் உள்ளவரும் ஏமாற்ற முடியாது. இப்படிப்பட்ட அக்கிரமங்களையெல்லாம் செய்து, கோயிலில் பூவும், நீரும் கொண்டு அர்ச்சனை செய்தும் விழா நடத்தியும் ஆண்டவனைத் திருப்திப்படுத்த நினைத்தால் அது பயனற்றதாகவே முடியும் - இறைவன் அவர்களைக் கண்டு சிரிப்பான். 'பொக்க மிக்கவர் பூவும் நீரும் கொண்டு நன்கு நிற்பன் அவர்தமை நாணியே! என்று நாவுக்கரசர் இதைத்தான் விளக்கியுள்ளார், இறைவன் சிரிப்பதோடு, இப்படிப்பட்டவர்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/128&oldid=782398" இலிருந்து மீள்விக்கப்பட்டது