பக்கம்:நாடு நலம் பெற.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 127 படைத்தோமே என நாணவும் செய்வான்; நமக்காக அவன் நானுவான் என்கின்றார். இவற்றையெல்லாம் நோக்கும் போது, நாடு வாழ - நல்லவர் வாழ - நாட்டுப் பண் பாடு கெடாது வாழ- மக்கள் பெறுவன பெற்று வாழநல்லவர் நாடாள வேண்டும். அன்று மன்னர்கள் நாடாண்டனர். இன்று மக்கள் - பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட மக்கள் யாவரும்தான் நாடாளும் மன்னர்கள். இதையேதான் பாரதி 'எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று விடுதலைபெறும் முன்பேஅன்றே பாடிவிட்டுச் சென்றான். எனவே, நம்நாட்டில் ஒரு பாதி மழையால் அழிய - ஒரு பாதி குடிநீருக்கும் அலைய - தோன்றக் கூடாத இடத்திலெல்லாம் நிலம் நடுங்க - பூகம்பம் உண்டாக நாமே. எல்லாருமே காரணமாகின்றோம் என உணர்தல் வேண்டும். இந்த உலகம் உள்ளமைக்கு, நாம் அறிவியல் முறையில் எத்தனையோ காரணங்களைக் காட்டினும் ஆன்மீக உயிரினப் பண்பின் அடிப்படையில் ஒரு பெருமன்னன்-பாண்டியன் இளம்பெருவழுதி புறம் 182இல் ஒரு காரணத்தைக் காட்டுகின்றான். மற்றவர் வாழத் தாம் வாழும் மற்றவர் வாடத் தாம் வாடும் இந்த உலகம் - தேவையானால் பிறர் வாழத் தாம் வாடும் நல்லவர் உள்ளமையே இந்த உலகம் வாழக் காரணம் எனக் காட்டுகின்றான். ஆம்! ஒரு பெருமன்னன் விரும்பினால் தன்னால்தான் உலகம் வாழ்கிறது என்று பறை சாற்றிக்கொள்ள முடியும். ஊர்களையெல்லாம் தம் பெயரிலும். தம் தலைவர்கள் பெயரிலும், இன்று சில காலமே ஆளும் தலைவர்கள் போலச் செய்து கொள்ளலாம். ஆனால் தமிழ் உள்ளம் பூண்ட அப்பாண்டியன், 'அயர்விலர் அன்னமாட்சி அணையராகி தமக்கென முயலா நோன்தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/129&oldid=782400" இலிருந்து மீள்விக்கப்பட்டது