பக்கம்:நாடு நலம் பெற.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நாடு நலம் பெற. பிறர்க்கென முயலுநர் உண்மையானே உண்டால் அம்ம இவ்வுலகம் (புறம் 182) என நல்லவர்- தம்மை மறந்து நாட்டை- மக்களைசமுதாயத்தை வாழ வைக்க நினைப்பவர்களால்தான் உலகம் வாழ்கிறது என்கிறார். அத்தகைய நல்லவர்-இந்த நூற்றாண்டில் நம் காந்தி. வாழ்ந்தார். அவரால் நம் பாரத நாடு விடுகலை பெற்றது. ஆனால் நாம் அவருக்குத் தந்தது குண்டுப் பரிசு. ஆம்! இயேசுவைச் சிலுவையில், ஏற்றிய மிருகம்-மகமதுவைக் கல்லால் அடித்த மிருகம்மணிவாசகரைக் கோடை வெயில் மண்ணில் புரட்டிய மிருக்ம்-சாக்க்ரடிசை விஷம் கொடுத்துக் கொன்ற மிருகம் இன்று காந்தியையும் கொன்றது. எனவே. மனிதன் மிருகமாகிவிட்டான். பின் பூகம்பமும் தண்ணீர்ப் பஞ்சமும் அதே வேளையில் அதே நாட்டில் வெள்ளமும் வராது என் செய்யும்? இயற்கை அன்னை நமக்குப் பாடம் கற்பித்தாலும் நாம் உணருவதில்லை. எங்கும் கொலை, கொள்ளை, வழிப்பறி. காமவெறிக்களி யாட்டம், பெரிய வங்கிகள் ஏமாற்றம், பொருள் வாங்கு வதில் கையூட்டு, எதிலும் இலஞ்சமும் மோதலாலும், பிற வற்றாலும், புகைவண்டிப் பயணத்தாலும் பல இழப் புக்கள், இத்தனையும் நிறைந்தால் பூமகள் எப்படிப் பொறுப்பாள்? தாங்குவாள்? எனவே நடக்காதன நடக்கின்றன. நாடு நலிவுறுகின்றது. ஆனால் நாடாள் வோர், நாடு எக்கேடுகெட்டால் நமக்கென்ன? நாம்நம்மைச் சேர்ந்தவர்கள் நன்கு வாழ்ந்தால் போதும் என்கிற போக்கில் தானே இன்று இருக்கிறார்கள். 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால், யான் உயிர் என்பது அறிகை வேல் மிகுதன்னை வேந்தர்க்குக் கடனே" (புறம் 186

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/130&oldid=782404" இலிருந்து மீள்விக்கப்பட்டது