பக்கம்:நாடு நலம் பெற.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 129 என்று மோசிகீரனார் கூறியபடி, மன்னர் ஆளுகின்ற னரா? உடலை உயிர் ஒம்புவது போல நாட்டை ஆள வேண்டும். இவ்வாறு இன்று நாம் ஆளப்படுகிறோமா? கம்பர் மன்ன்ரை 'உயிரெலாம் உறையுமோர் உடம்பு மாயினான்' என்று உலகை உயிராகவும், மன்னனை உடலாகவும் காட்டுகிறார். அப்படியும் நம்மை ஆள்வார் வாழ. வில்லையே; பின் எப்படி நாடு நாடாகும்? இவ்வாறு எத்தனையோ காட்டிக் கொண்டே செல்லலாம். இன்று நம்நாடு ஒன்று என்று சொல்லுகிறோம் ஆனால் ஒரு கையில் ஈ உட்கார்ந்தால் மறு கை ஒட்டுகிறது. உடம்பில் ஒரிடத்தில் நோய் கண்டால் மற்ற உறுப்புகள் அலறு கின்றன. எங்கோ அடிபட்டால் கண் நீர்விடுகிறது; வாய், புலம்புகின்றது. ஆனால் நாட்டில் ஒரு பகுதியில் வாடும் பயிரை வாழ வைக்க, தேவைக்கு மேல் கட்டி வைக்கும் நீரைக் கொடுக்க மற்றொரு பகுதி மறுக்கின்றது. இத ஒரு நாடு என்பதற்குச் சான்றாகுமா? நீதி மன்றம் ஆணை தந்தும் நேர்மையை மறுக்கும் நிலை நாட்டுக்கு ஏற்ற தாகுமா? நாடு என்று அழைக்கும் தகுதி இதற்கு உண்டா? இத்தகைய அக்கிரமத்திற்கு இதுவரை தராத ப்ரிசினை இயற்கை அன்னை அளித்த நிலையினை நாம் அறிவோம். எல்லாக் கொடுமைகளுக்கும் இத்தகைய பரிசுகள்தாம் தரப்பெறும் என்று உணர்ந்து, இனியாவது நாம் திருந்தி வாழ்வோமா! வாழ்ந்தால் நாடு நிலைக் கும். இன்றேல் பெரும் இயற்கையின் சீற்றத்துக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். தினமணி நாளிதழ் தன் 15.10.93 இன் தலையங்கத்தில் மராட்டிய மாநிலத்தில் நிகழ்ந்த பல கலவரங்கள், இழப் புக்கள், இரெயிலில் அடிபட்ட கொடுமை, பூகம்பம் ஆகிய வற்றிற்குப் பரிகாரம் கூறி இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/131&oldid=782407" இலிருந்து மீள்விக்கப்பட்டது