பக்கம்:நாடு நலம் பெற.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நாடு நலம பெற ஸ்திரமான, கட்டுக்கோப்பான நகரம் என்கிற பெருமையைப் பம்பாய் இழந்து வருகிறது. காட்டின் வர்த்தக நிதித் தலைநகரம் உலக அளவில் இன்று கெட்ட பெயர் சம்பாதித்து உள்ளது. இதை அனுமதிக்கக் கூடாது வெளிநாட்டில் துர்ப்பிரசாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அந்நிய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்ட இடந்தரக் கூடாது. என்பதே இனிக் கொடுமை நிகழா திருக்கத் தினமணி காட்டும் வழி. ஆம்! இத்தகைய மனித மாறாட்டங்களே மண்ணையும் விண்ணையும் சாடும் கெட்ட கருவிகளாக அமைகின்றன. அதனாலேயே பூகம் பங்களும் பிறவும் நிகழ்கின்றன. - மேலும், தினமணிக் கதிர் 10.10.93 இதழில் இந்நில நடுக்கம் பற்றியும் அடிப்படை காரணங்கள் பற்றியும் சற்றே விளக்கியுள்ளது. நம் நாடு இந்த நில ஆய்வில் எங்கோ பின் நிற்கிறது என்பதைக் காட்டுகிறது. 'நில நடுக்க ஆய்வுத்துறையில் இந்தியா எங்கோ மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ளது. எனவே, நாம் உடடினாக நமது நிலநடுக்கவியல் ஆய்வு மையங்களின் தரத்தை உயர்த்தியாக வேண்டும்.' மராட்டிய மாநிலத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட பகுதி கள் தக்கண பீடபூமியைச் சேர்ந்தவை தக்கண பீட பூமியின் மேற்பரப்பில் உள்ள பாறை அடுக்குகள் குறித்து விரிவான ஆய்வு எதுவும் நடைபெறவில்லை என்று தேசிய புவி பெளதிக ஆய்வு நிறுவன முன்னாள் இயக்குநர் திரு. வினோத் கே. கவுர் கூறுகிறார். . 'தென் இந்தியாவில் நில நடுக்கம் ஏற்படாது என்ற கருத்தைக் கிலாரி நில நடுக்கம் தகர்த்து விட்டது. மகாராட்டிர நிலமட்டுமல்ல, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு முதலிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/132&oldid=782409" இலிருந்து மீள்விக்கப்பட்டது