பக்கம்:நாடு நலம் பெற.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 131 வாய்ப்பு உண்டாகும் பாதாள பாதிப்புகள் உள்ளன. என்ற கருத்து பெரிதும் அச்சம் தருவதாக உள்ளது (5.10.93 கதிர்). இவ்வாறு தினமணிக்கதிர் கூறுவதில் பொருள் உண்டு. இந்தக் கிலாரி நிலநடுக்கம் பற்றித் தேசியப்புவி பெளதிக ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களே ஆச்சரியப்படுகின்றனர் என்று அது கூறுகிறது (பக்கம் 4). ஆம். விந்திய மலைக்குத் தெற்கே நிலநடுக்கம் உண்டா காது என்பது ஆய்வாளரும் அறிஞரும் சான்றோரும் கண்ட முடிவாகும். ஆனால் இன்று எப்படி நடந்தது? இன்றைய கதிர் இயக்க நிலையும் அத்தகையதே. சென்னையில் மிக்க கொடுமை வாய்ந்த கதிரியக்கப் பேழைகளைத், திருடி நீரிடை இட்ட நிலை நடக்கலாமா? காவல் எங்கே? கட்டுப்பாடு எங்கே? அதன் கசிவு சென்னை நகர உயிரினத்தையே அழித்து ஊரையே பாலைவன மாக்கும் என்கிறார்களே! இத்தகைய கொடுமை வாய்ந்ததை ஏன் உண்டாக்க வேண்டும்? அமெரிக்காவில் ஒர் ஊரில் உள்ள அணுகுண்டுகளே உலகை அழிக்கப் போதுமானவை. இதைப்பற்றி என் பயண நூலில் (ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்) தெளி வாக எழுதியுள்ளேன். முந்திய அணுகுண்டால் அழிந்த நாடுகள் - தீவுகள் இன்றும் சரியாகவில்லை. மனிதன்மற்றொரு மனிதனை இத்தகைய கொடுமைகளுக்கு இலக்காக்கலாமா? அப்போது இயற்கையும் சீற்றமடை யாதா! அச்சீற்றத்தின் விளைவே பூகம்பங்களும் பிற கொடுமைகளும். இவற்றை எண்ணியாயினும் மனிதன் திருந்துவானா? இக்கதிர் வீச்சின் கொடுமையினையும் சூலை மாதத்தில் போடப்பட்ட அது, அக்டோபரில் கண்ட நிலையையும் அது வெளியே போடப்பட்டிருந்தால் உண்டாகி இருக்கும் அவல நிலையினையும், எதுபற்றியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/133&oldid=782411" இலிருந்து மீள்விக்கப்பட்டது