பக்கம்:நாடு நலம் பெற.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நாடு நலம் பெற கவலையற்றிருக்கும் மக்களையும் அரசாங்கத்தையும் பற்றியும் திரு. சுதாங்கன் அவர்கள் கருவறுக்கும் கதிர் வீச்சு என்ற தலைப்பில் தினமணிக் எதிர் 31.10.93 நாளிட்ட இதழில் விளக்கமாக எழுதியுள்ளார். அதே கட்டுரையில் அமெரிக்க நாட்டு ஒரு நகரில் இத்தகைய அவல நிலை ஏற்பட்டால் செய்ய வேண்டியவை பற்றி அந்த அரசாங்கம் மேற்கொண்டே எல்லா நடவடிக்கை களையும் இரு பேராசிரியர்கள் எழுதிய எழுத்துக்களைக் கொண்டே நன்கு விளக்கி இருக்கிறார். LORRY COLLINS, DAMINIC LAPIERRE sT6ğı D @(56uń 6T(19$\uu THE FIFTH HORSE as in D BIGas 35. 31.5% அமெரிக்க அரசாங்கம் செய்யும் ஏற்பாடுகளை நம்மவர் கள் ஏன் செய்யக்கூடாது? இன்றும் செய்ய நினைக்க வில்லையே அதனாலேதான் ஒளவையார் - எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்று கூறிச் சென்றார். இந்த - வரப்போகும் அவல நிலையினை இன்றைய விஞ்ஞானிகள் ஒரளவு கண்டு எச்சரிச்கை செய்துள்ளனர். உலகின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும், கடலின் மட்டம் உயர்ந்து கொண்டே வருவதாகவும் கி.பி. 2000த்தில் கடல் மட்டம் முப்பது மீட்டிர் (100 அடி) உயரும் நிலை உள்ளது என்றும் கூறுகின்றனர். (வானொலி 29.10.93 - 8.30 செய்தி) இவை எல்லாம் எதனால்? அமைதியோடு, குளிர்ந்த உள்ளத்தோடு, தணிந்த உணர்வோடு வாழ வேண்டிய மனிதன்; உள்ளம் வெம்பி, மற்றவர் நிலை கண்டு பொறாமைத் தீயால் பொசுங்கி, தான் மட்டும் வாழ வேண்டும் என்று கொழுந்து விட்டெரியும் வெப்ப எண்ணத்தால், எல்லா வகையிலும் உள்ளம் கொதிக்கும் வகையில் நிலைகெட்டு வாழ்ந்தால் அவன் வாழும் பூமி ஏன் வெப்பமடையாது? 'எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/134&oldid=782414" இலிருந்து மீள்விக்கப்பட்டது