பக்கம்:நாடு நலம் பெற.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும், 133 நிலனே' என்பது ஒளவையார் பொய்யா மொழி யன்றோ? மேலும் நூறு அடி உயரம் கடல் உயருமானால் சென்னை போன்ற நகரங்களின் கதி என்னாகும்? எண்ணிப் பார்த்தவர் உண்டா? ஊரார் நிலத்தைஅரசாங்க நிலத்தை- ஊரார் சொத்தை எப்படி நமது உரிமையாக்கி, அதற்கு எப்படி எப்படிக் கொடுமை இழைக்கலாம் என்று எண்ணி மனித மனம் வெம்பிச் சாம்புகிறது. அதில் வெற்றி கொண்டதாக வெப்பம்' விழாக் கொண்டாடுகிறது. எப்படிப் பெண்களைக் கற்பழிக்கலாம்? எவ்வெவ்வாறு இலஞ்சம் வாங்கலாம், இலட்சமா- சீ, வேண்டாம்- கோடியாகக் கொடு என்று கேட்கலாம் என உள்ளம் எரிகிறதே! எப்படி பொதுச் சொத்தை- சமுதாயம், கோயில் நிலங்கள், சொத்து முதலியவற்றை நமதாக்கிக் கொள்ளலாம் என்பது போன்ற மனித நச்சு எண்ணங்கள்- மண்ணில் பிரதிபலிக் காமல் என்ன செய்யும்? எனவே விஞ்ஞானிகள் நேர்மை யாக வாழ வழி காணவேண்டும். இன்றேல் கல்கி அவதாரத்தால் காசினி முற்றும் வெள்ளக் காடாகியும், வெந்தணலால் வெந்தும் அழியப்போவது உண்மை; விரைவில் அழியப் போவது உண்மை விண்ணில் பறக் கிறேன். சந்திரனில் கால் வைத்து விட்டேன்! அங்கார கனில் அடியிட்டேன், இனி அங்கே குடி போகிறேன் எனப் புறப்படும் மனிதன் அங்கேயும் வாழ வழி இல்லாமல்- திரும்பி இங்கே வந்தால் இங்கேயும் வாழ மண் இல்லாமல் திரிசங்கு சுவர்க்கமாகத் திண்டாடி அழியப் போகிறான். ஆம! உயிரினம் அழியும் காலம் அண்மையில் உள்ளது இதை நான் சொல்லவில்லை. அன்று தெளிந்து கூறிய மெய்ஞ்ஞானமும் இன்று ஆராய்ந்து கண்ட விஞ்ஞானமும் அதைத்தான் கூறு கின்றன. எனவே, மனிதன் வாழ்வாங்கு வாழும் நெறியில் தம் கடமை மற்றவரைத் தாங்குதலே என்ற உணர்வில் 'எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/135&oldid=782415" இலிருந்து மீள்விக்கப்பட்டது