பக்கம்:நாடு நலம் பெற.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும 141 பறைசாற்றும்-வானொலியிலும், தொலைக்காட்சியிலும் விளம்பரம் செய்யும், மாநாடுகளில் வானளாவுப் பேசும் அரசாங்கம் அவ்வாறு வெட்டுபவர்களைத் தடுக்க ஏன். கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது? நடவடிக்கை இல்லையாயின் இயற்கை தன் தண்டனையைத் தந்தே தீரும் என்பது உறுதி. இவையாவும், இன்று பல அறிஞர் கூறுவனயாவும், ஒளவையாரின் . "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' - என்ற வாய்மொழியினை வலியுறுத்துகின்றன அன்றோ! முன்னரே இமயம் கடலுள் ஆழ்ந்த காலத்தைப் பற்றியும் தெற்கே பல நாடுகள் அழிந்தன பற்றியும் எழுதி யுள்ளேன். பழைய நில நூலார்- தொன்மை நில ஆய்வாளர் போன்றோர் கண்ட உண்மையும் நம் இலக். கியங்கள் காட்டும் உண்மையும் ஒன்றே. - விந்தியமலைக்குத் தெற்கும் குமரிமுனைக்கு வடக்கும் உள்ள நிலப்பகுதி காலத்தால் மிக மிக முந்தியது. இத் தான் உண்மையும் கூட. நான் முன்னே க்ாட்டியப்டி எங்கோ தெற்கே இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து இந்தியப் பகுதி வடக்கே வந்து இமயத்தொடு முட்டிற்று என்று காட்டியபடி இன்றேனும், இந்திய நாட்டின் தென்பகுதி-விந்திய மலைக்குத் தெற்குள்ள பகுதி காலத்தால் மிக மிக முந்திய தெனவும் வடபகுதி இமயம் உட்பட பின் கடலினின்று மேலெழும்பிக் காலத்தால் பிந்தியவாக உள்ளன எனவும் கொள்ள வேண்டும். இந்த ஆய்வின்படி பல அறிஞர்கள் மண்திணிந்த தென் பகுதியில் நில அதிர்வும், நடுக்கமும் உண்டாகாதெனவும், வடபகுதியில் பல இட்ங்களில் உண்டாகும் எனவும் அறுதியிட்டுக் கூறினர். அது இன்று வரை உண்மையாகவும் இருந்தது. குவேட்டர், பீகார் போன்ற இடங்களில் பெரு நிலையிலும் வேறுபல இடங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/143&oldid=782433" இலிருந்து மீள்விக்கப்பட்டது