பக்கம்:நாடு நலம் பெற.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 143 தக்க நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டோம். இதுபற்றி @fig (THE HINDU) 1.1093 syū, 1810.93 oth நாளிதழில் கல்கத்தாவைச் சேர்ந்த B.C. DUTTA அவர்கள் எழுதியுள்ள கடிதத்திலும் நல்ல குறிப்புகள் உள்ளன. சீன நாடு அத்தகைய நிலநடுக்கத்துக்கு முன் தக்க நடவடிக்கை எடுத்து உயிர்களையும் பொருளையும் காப்பாற்றியது எனக் குறித்த அறிஞர் விளக்கத்தை முன்னரே காட்டியுள்ளேன். இந்தக்கட்டுரையில் கற்பனை (Myth) என்று அவர் குறித்திருப்பது பொருந்தாது. அது தான் உண்மை. அதனால் பல பேராய்வாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர்- தடுமாறுகின்றனர். இன்று நிலை மாறியதற்கு நாமே காரணம் என்பதை நன்கு தெளிந்து, நில நல்லாள் வருந்தா வகையில் வாழ்வின் அடிப்படையைப் பின்பற்ற வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவர் இத்தகைய கொடுமைகளுக்கெல்லாம் மேலே சில அறிஞர்கள் காட்டியபடி மக்களே காரணம் என்கிறார். "சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு சிலப்றான் தாங்காது மன்னோ பொறை" பண்புடையார்ப் பட்டுண்(டு) உலகம்: $ அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்’ என்ற இரு குறள்பாக்களும் அவர் பாடிய பொய்யா மொழிப் பாடல்களன்றோ! ஆம். அவை பொய்க்காது. நாம்- மனிதர்- மனிதர்களாக வாழவில்லை, இயற்கை மகள்- பாரதத்தாய்- நில மகள் சீற்றம் கொள்ளு கிறாள்.அல்வளவே. இவ்வாறு சமுதாயமும் அரசாங்கமும் தாம் பல உற்பாதங்களுக்குக் காரணம். மேலும், தனி மனித வாழ்வும், அதில் வழுக்கி விழும் நிலையும், அதைக் கண்டும் காணாதிருக்கின்ற ஆள்வார் நிலையும் சற்றே எண்ணிப் பார்க்கவும் வேண்டும். நாடே தலைவிரி கோல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/145&oldid=782437" இலிருந்து மீள்விக்கப்பட்டது