பக்கம்:நாடு நலம் பெற.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 நாடு நலம் பெற மாக இருக்கின்ற நிலை கண்டோம். நாடு மட்டுமன்று. வீடும் தலைவிரி கோலமாக உள்ளது. வீட்டில் உள்ள பெண்கள் தங்கள் தலை முடியை அவிழ்த்து விட்டு, விரித்துத் தம் தலைவிரி கோலத்தைக் காட்டுகின்றனர். பெண்கள் தலைவிரித்துத் தெருவிலே வந்தால், வெளியே செல்பவர் அதைச் சகுனத்தடையாக-கெட்ட சகுனமாக எண்ணிச் செல்லாது அமைவர். ஆனால் இன்று நாட்டிலே உள்ள பெண்கள் எங்கும் தலை விரித்தாடுவ தால் எப்படி நல்ல செயல்கள் நடக்கும் என ஏங்க வேண்டி யுள்ளது. அரசாங்கங்கள் அல்லல் உறுகின்றன. ஊர்கள் அவலமாகக் காட்சி தருகின்றன. வீடுகளிலோ சொல்ல வேண்டியதில்லை. வீட்டுக்கு வீடு பூசல் - கொள்ளை நீதி மன்றத்தில் அளவிடற்கரிய விசாரணைகள். இந்தத் தலைவிரி கோலத்தைத் தனி மனிதர் மட்டும் ஆதரிக்கவில்லை. அரசாங்கமே அங்கீகாரம் செய்கிறது. தன் அலுவலகத்திற்கு அவ்வாறு வரும் பெண்களுக்கு வரவேற்பு அளிக்கிறது. தொல்ைக்காட்சியில் தலைவிரித்து ஆடி - அசைந்து - செய்தி படிப்பதுதான் நாகரிகமாக இருக்கின்றது. தில்லித் தொலைக்காட்சியில் வரும் பெண்கள் பெரும் பாலும் பொட்டு இட்டு புடவை கட்டிக்கொண்டு, தலையை ஒழுங்காக சீவிக் கொண்டு அல்லது பின்னல் இட்டு வருவதைக் காணமுடிகிறது. ஆனால் பண்பாடு பற்றிப் பலமாகக் கத்தும் தமிழ் நாட்டுத் தொலைக்காட்சி தலைவிரி கோலமாக அன்றோ உள்ளது. இத்தக் கொடு ழையை எப்படித் தொலைக்காட்சியினரும் அரசாங்கமும் அனுமதிக்கின்றனர்? (அதிலும் ஒழுங்கான முறையில் உடை உடுத்தும், முடி திருத்தியும் வரும் பெண்கள் உளர். அவர்கள் பாராட்டப் பெற வேண்டியவர்கள்). ஆனால் பலர் இந்த இயற்கை நியதிக்கு, பண்பாட்டு முறைக்கு மாறுபட்டவர்களாகவே தொலைக்காட்சியிலும், படக் காட்சியிலும் காட்சி தருகின்றனர். _, x

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/146&oldid=782439" இலிருந்து மீள்விக்கப்பட்டது