பக்கம்:நாடு நலம் பெற.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 145 x- HJSMA AAAA SAAAAA SAAAAAS AAAAA AAAAMAggMMAAA SAAAAASSLLL SAAAAAAMM SAAAAAS AAASASAS SSAS SSASASS ஆடைகள், ஆண், புெண் முக்கிய உறுப்புகளை மறைப்பதற்கு-தம் ஈனமானங்களைக் காப்பதற்கென உண்டாயின ஆதாம் ஏவாள் காலத்திலே - கற்கால மனிதர் வாழ்விலே அங்கம் மறையா வாழ்வு இருந்திருக்' கலாம். ஆனால் அப்பொழுதே தழை உடுத்துத் தன் மானம் காத்த மகளிர் இருந்திருக்கின்றனர். ஆனால், இன்று மார்பினைப் பாதி காட்டும் ஆடையும், ஆண், பெண் வேறுபாடு காணாத ஆடைகளும் நாட்டில் வாழ் கின்றன. தென் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்று, பெண்கள் தம் நாட்டு மரபின் வழி வந்த ஆடைகளைத் தவிர, மேலைநாட்டு ஆடைகளை அணியக்கூடாது என்று சட்டமே இட்டுள்ளது (மங்கை - ஆகஸ்டு 1993). ஆனால், இங்கே அரசாங்கமே அத்தகைய உடல் காட்டும் உருவ வேறுபாடு அற்ற ஆடைகளை அனுமதிக்கின்றது. இவ்வாறு மரபுக்கு மாறுபட்ட வாழ்க்கையை மனிதன் மேற்கொள்ளும் போது ஏன் இயற்கை தன்னிலையிலி ருந்து மாறுபட்டு வெடிக்கக்கூடாது? யார் தடுக்க முடியும்? மகளிர் கூந்தலை எப்படிப் பின்னலிட்டு அழகுற முதுகில் தொங்கவிடவேண்டும் என்பதைச் சிவப்பிரகாசர் தம் பிரபுலிங்க லீலையில் சொல்லுகிறார். மாயை ஓர் அழகிய மங்கை, பிற எல்லாப் பண்பு களையும் உடைய தெய்வ நலம் சான்ற பெண். அவள் சிறப்பினை அவர், 'கலையை மதிக்கும் புலவர்தமை, சித்தர் குழாத்தைக் - . கடவுளரை நிலையை மதிக்கும் முனிவரரை, திசைமாமுகனை நிரைவளையாச் சிலையை மிதிக்கும் நெடியோனை விழுங்கி உமிழாத் திறன் மாயை'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/147&oldid=782441" இலிருந்து மீள்விக்கப்பட்டது