பக்கம்:நாடு நலம் பெற.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கேர்லமும் தரணியன் ஒலமும் I49 கைப்பை அல்லது காமக் கதை நூல்கள், கண்ணிர்கள்' நீர்ாகும். இந்த நிலையில் நம் நாட்டுப்பெண்கள் த்லைவிரி கோலமாக உள்ள் க்ார்ண்த்த்ால் நர்டு-ஊர்-அர்சு அன்னத்தும் என்று அழியும்ோ என அஞ்சி அஞ்சிச் ச்ர்க வ்ேண்டியுள்ளது. அரசாங்கமே இந்த அவலநில்ைக்குக் காரணமாகின்றது. கள்ளுக்க்டைக்ண்ள திறந்து வைத்து, மதுவிலக்குப் பிரசாரம் செய்வது பேர்லப் பொது வர்ழ் விலும் பட வாழ்விலும் தகாத முறைகளிலெல்லாம்-பண் பாட்டு ந்ெறிகளுக்கெல்லாம் மாறுபட்ட உடை, உணவு பழக்க வழக்கங்கள், மக்களிடத்தும்- ஆண், பெண், இரு பாலரிடத்தும் அமைவதால்தான் நாட்டில் அமைதி இல்லை. ஒரு காலத்தில் ஒன்றி இருந்த இந்தியா பிளவு பட்டது. இன்னும் எத்தனை பிளவுகள் உண்டாகுமோ என ஆள்வோரும் அல்லாரும் அஞ்சி, அஞ்சி வாழ் கின்றனர். எண்ணற்ற கொலைக்ள்-கொள்ளைகள்-வழிப் பறிகள்- நூதன வகையான திருட்டுகள்-கற்பழிப்புகள் கல்விச்சால்ைகள் காமக்கூடங்களாதல்- ஆள்பவர் சிலர் நாடு நமக்கெனக் கருதிப் பொருள் பெருக்குதல் போன்ற கொடுமைகள் நடைபெறுகின்ற்ன. வாகனங்கள் நாள் தோறும் இடிபட்டுப் பலரைக் கொலை செய்கின்றன். நாட்டின் ஒரு பகுதியில் பெருவெள்ளத்தால் அழிப்புஅடுத்த பக்கத்தில் குடிநீருக்கும் தடுமாற்றம். இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சர். விஸ்வேஸ்வரையா வரைந்த கங்கை காவிரி இணைப்பு செயல்பட்டிருந்தால் இந்த இருவேறு வகைப்பட்ட கொடுமை உண்டாகாதே என அறிந்தவர் பேசுகின்றனர். எனவே நாடு அமைதி யாக வாழ வேண்டுமானால் நாம் வள்ளுவர் கூறியபடி வாழ்வாங்கு வாழ வேண்டும். எப்படி என்பதை அவரே நூல் முழுதும் காட்டியுள்ளார். காதல் வாழ்வு அதில் உண்டு; கற்றார் மற்றார் கலந்து வாழும் வாழ்வு உண்டு, நல்ல நாடு உண்டு, அமைச்சு உண்டு, அரசு உண்டு, இல்லற்மும், துறவறமும் நல்லறமாக வாழ வழி உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/151&oldid=782451" இலிருந்து மீள்விக்கப்பட்டது