பக்கம்:நாடு நலம் பெற.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நாடு நலம் பெற துரியோதனன், துச்சாதனன் இரத்தங்களே எண்ணை யாகப் பயன்படும் என்று எடுத்த சபதம் இல்லையானால் பாரதப் போரே நடந்திருக்காது. தேவி திரெளபதி சொல்வாள் - ஒம் தேவி பராசக்தி ஆணை உரைத்தேன் பாவி துச்சாதனன் செந்நீர் - அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம் மேவி இரண்டும் கலந்து - குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன்யான் - இது செய்யுமுன்னே முடியேன் என்றுரைத்தாள்' என்று பாரதி இவள் சபதத்தைப் பாடுகிறார். இன்றைய தலைவிரித்த பெண்கள், பிற நாட்டின ராலோ - உள்ளே உள்ளவர்களாலோ-அகப்பகைபுறப்பகை ஆகிய இரண்டும் கலந்து நாட்டை அல்லலுக்கு உட்படுத்திய பிறகுதான் - அன்றி பல பூகம்பங்கள்கடல் கொந்தளிப்புகள் போன்றவை உண்டான பிறகு தான் குழல் முடிப்பார்களோ! என்னவோ! தெரியவில்லை. "மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச் சிலம்பும் கண்ணிரும்-வையைக்கோன் கண்டளவே தோற்றான் காரிகை தன் சொற்செவியில் உண்டளவே தோற்றான் உயிர்' என்று இளங்கோவடிகள் ஒருத்தி விரித்த குழலால் நாடாண்ட மன்னவன்- கூடலான் கூடாயினதையும்அரசு மாய்ந்ததையும், நாடு அழிந்ததையும் இப்பாடலா லும் தொடர்ந்தும் காட்டுகிறார். அன்று கண்ணகி உடம்பு வீதியில் புரண்டு அழுததால் பொடிபட்டது. இன்று பெண்கள் தாமே விலை கொடுத்து வாங்கிப்பொடி பூசிக் கொள்ளுகின்றனர். தலை விரிகோலம் இருவருக்கும் அமைந்த ஒன்றே. கையில் தனிச் சிலம்பிற்குப் பதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/150&oldid=782449" இலிருந்து மீள்விக்கப்பட்டது