பக்கம்:நாடு நலம் பெற.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 147 நமக்குப் படம் பிடித்துக் காட்டுவனவேயாகும். கிராமத் தில் மறுமணம் செய்யும் ஆடவனைப் பார்த்து (வயதான) கொண்டைக்காரி போனால் (இளையவளான) பின்னல் காரி வருவாள் என்று கூறும் மரபு இன்றும் உண்டு. ஆனால் தலைவிரித்தாள் வருவாள்' என்று யாரும் கூறுவ தில்லை. இவற்றை உணர்ந்து இயற்கை நெறியில் நிற்பின் உய்தி உண்டு. இன்றேல்,... இந்திய நாட்டின் வடக்கே ஒருத்தி தலைவிரி கோல மாக, ஒரு பெரும் போரே நடந்து:பாரதமே பாழ்பட்டது. அப்படியே தெற்கே ஒருத்தி தலைவிரித்த கோலத்தில் வரப் பேரரசும் நகரும் அழிந்தன. இவற்றை விளக்கும் காப்பியங்களை நாள்தோறும் படித்துக் கொண்டும் போற்றிக் கொண்டும் இருக்கும் நிலையில், இன்று எங்கும் மக்கள் தலைவிரிகோலமாகக் காட்சியளிக்கின் றனர். முடிவு என்னவாகும் என்று நான் சொல்ல வேண்டுமா? 'மலைகண்டதென என்றன்மறத் தண்டின் நிலை கண்டும் மகவான்மைந்தன் சிலை கண்டும் இருவர் பொரும் திறல் கண்டும் எமக்காகத் திருமால் நின்ற நிலை கண்டும் இவள் விரித்த குழல் கண்டும் நேரார் தம்மைக் கொலை கண்டு மகிழாமல் அவனடியில் குடி இருக்கக் கூசினாயே என்று தருமன்,'ஐந்துார் வேண்டு அவை மறுத்தால் ஐந்து இல்லம் வேண்டு எனக் கண்ணனைத் தூதனுப்ப நினைத்த போது, வீமன் கூறிய வாசகமே இவ்வாறு வில்லிப்புத்துாரரால் பாட்டாக உருண்டோடி வருகிறது. எனவே, பாரதப் போருக்கு திரெளபதியின் விரித்த கூந்தலே காரணமாகின்றதல்லவா! ஒரு வேளை அன்று சபையில் திரெளபதி அவிழ்ந்த கூந்தலை முடிக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/149&oldid=782445" இலிருந்து மீள்விக்கப்பட்டது