பக்கம்:நாடு நலம் பெற.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 191_ தார். கருத்துக்கும், கொள்கைக்கும் மாறாகத் தம் பெயரிலேயே ஒரு பல்கலைக்கழகமும் தாம் வாழும்போதே உருவாவதைத் தடுத்தார். முடியவில்லை. கொள்கையாஉயிரா என்ற எண்ணத்தில், உயிரினும் கொள்கையே மேல் என்று எண்ணி, அப்பல்கலைக்கழகம் நாள் குறித்து விழா அமைத்த நாளுக்கு முன் இரவு தம் உயிரை நீத்தார். அவர் வாழ்ந்தார் பெயரில் இருந்த இரண்டொரு இடங்களின் பெயர்களையும் மாற்றினார். ஆனால், இன்று குட்டித்தலைவர்கள் பெயர்களிலேயே பல இடங்கள் உண்டாகின்றன. (எம்.ஜி. ஆரின் அச்செயலைப் பாராட்டி நான் என் ஓங்குக உலகம்' என்ற நூலில் விளக்கி எழுதியுள்ளேன்). தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள்" என்றார் அப்பர், நல்லவர் செயல் கருதி. மனிதனின் இக்கொடுஞ் செயல் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் 19.11.95 இல் Expelling God” என்ற ஒரு கட்டுரை வந்துள்ளது. அதில் ஒரு சில வரிகளைக் குறிக் கின்றேன். - “To worship is a basic human need. Politicians, Film Stars and Cricketers have replaced our avadaras and munis, saints and prophets, while the Greedy God-men, each one claiming to be God himself, have a field day.” மேலும் 1967 பூனா அருகில் கொயினா (Koyna) பூகம்பத்தால் அடிப்பட்ட நிலையிலும், ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் கழித்தும் வேறு நர்மதை, தேரி, அணைக்கட்டுகள் கட்டுவதை மக்கள் நலம் பெறுவதைத் தடுக்க நினைக்கும் எண்ணம் வருகின்றது. மக்களுக்கு நில நடுக்கம் முதலியன ஆயும் வல்லவர்களுக்கும் அந்த கொயினா அணைக்கட்டே பூகம்பத்துக்கும் காரணம் எனக்கண்ட காரணத்தால், இவற்றைத் தடுக்க நினைக் கின்றனர். எனினும் அவற்றால் மக்கள் இறந்தமை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/153&oldid=782455" இலிருந்து மீள்விக்கப்பட்டது