பக்கம்:நாடு நலம் பெற.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 165 எச்சரிக்கையாக அமைகின்றது என அறிய வேண்டும். எனவே தரணியாகிய பூமாதேவி, மனிதன் தவறுகள் அளவற்று இழைக்கும்போது இத்தகைய முன் எச்சரிக்கை களை இட்டு குழந்தாய்! தவறாதே! மனிதத் தன்மையை விடாதே! விலங்கினும் கீழாகாதே, வாழ்! வாழவிடு! நாடெங்கும் வாழக் கேடொன்றுமில்லை! எல்லாரும் இன்புற்றிருக்க நினை, தாம்பெற்ற இன்பம் உலகம் பெற நினை. யான் 'எனது' என்னும் செருக்கு நீக்கு' என அறிவுறுத்துகிறாள். ஆனால் எங்கோ ஒடிக்கொண்டிருக் கும் இன்றைய மனிதனுக்கு இச்செயல்களும் அறிவுறுத்தல் களும் புரிவதில்லை; சொற்கள் கேட்பதில்லை, கேட்டால் நலன் விளையும் கேட்பானா? இக்கருத்தினை உள்ளடக்கி, மனிதன் தனக்குத்தானே தன் செயலால் அழிவைத் தேடிக் கொள்ளுகிறான் என்றும் அவன் தன் சூழலையும் இயற்கை நிலையினையும் மாசுபடுத்தியும் பிறவகையிலும் வேறுபடுகிறான் என்றும் அந்த வேறு பாடே அவனை அழிக்கும் என்றும் மேலை நாடுகளைச் சுட்டிக்காட்டி, தினமலர் 27.10.95ல் (பக்-10) 'அழிவை ஏற்படுத்திய மனித குலம் பலனை அனுபவிக் கிறது இப்போது என்ற தலைப்பில் ஒரு சிறுவிளக் கம் வந்துள்ளது. அதை இங்கே அப்படியே தருகிறேன். வாஷிங்டன்: அடுத்த நூற்றாண்டுகளில் உலகில் பாலைவனப் பகுதி அதிகரிக்கும். பனி மூடிய மலைப்பகுதி கள் உருகிப் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்படும். மனித குலம் கடந்த சில ஆண்டுகளாகத் தொழில்துறை நவீனப் புரட்சி என்ற பெயரில் சுற்றுச் சூழலை அளவு கடந்து மாசுபடுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட் டன் போன்ற வர்த்தக நாடுகள் இயற்கையின் வளங்களைப் பயன்படுத்திய விதம், அதற்கே தீமை ஏற்படுத்தும் வகையில் அழிவைக் கொண்டு வந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/167&oldid=782485" இலிருந்து மீள்விக்கப்பட்டது