பக்கம்:நாடு நலம் பெற.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நாடு நலம் பெற போகும் கொடுமைகளைக் குறித்துள்ளார். கருவுடைப் பெண்கள் அக்காலத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனப் பெங்களுர் M. D இராமானுஜர் எழுதி uudi smrtir. (Indian express 22.10.95 - Page 9) QSL Þs) கிராமத்து மக்கள் நன்கு அறிவர். கிரகணத்தைப் பார்த் தாலும் ஒரு சிறு தரும்பைக் கிள்ளினாலும் அனாவசிய மாக அலைந்தாலும் கருவுக்குச் சேதம், உடற்குறை அல்லது அழிவு உண்டாகும் என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கிராம மக்கள் அறிந்து செயல்பட்டதை என் முன்னோர் - பாட்டி காமாட்சி அம்மாள் கூறியதைக் கேட்டிருக்கிறேன் இந்தக் கிரகணம் அடுத்து வரப் போகும் மூன்றாவது உலகப்போருக்கு அடிக்கல் நாட்டும் என்றும் பதினாறு கிரகணங்கள் முடிய பெரும்போரே மூளும் என்றும் திரு. ஜெயின் அவர்கள் கூறுகின்றார். (Iudian express-22. 10.95 . Page—1) 1900&@5ı°o 2,000ê@5üb இடையே 24 சூரியக்கிரகணங்கள் வர வேண்டும் எனவும் அவற்றுள் இது (24.10.95) எட்டாவது முழுச் சூரியகிர கணம் எனவும் (வேறு குறைக் கிரகணங்களும் இடையில் வந்திருக்கலாம்) 1997 மார்ச்சு 9-ம் நாளிலும் 1999 ஆகஸ்டு 11-ம் நாளிலும் முழுச் சூரியக்கிரகணங்கள் உண்டு என்றும் கூறப்பெற்றுள்ளது (Indian Express 22.10.95 Page-8). இவ்வாறு நிகழ்வன வென்று கூறுவ தெல்லாம் தவறு என்று முற்றும் உணரா நிலையில் இங்கே சிலர் கூறினாலும் சோவியத், ஜப்பான் நாட்டு அறிவியல் அறிஞர்கள் 1978-மார்ச்சு 24-25 வலடி வாஸ்டாக்கில் நடத்திய (கிரகணம் நடந்தபோது) ஆய்வு வழியே, இவற்றால் பெரும் நிலநடுக்கம் முதலியன உண்டாகும் எனக்கூறுகின்றனர், என BW இராமன் சுட்டிக்காட்டு &airpm sr. (The Hindu 17.10.95 Page—5) @cism pu (24.10.95) கிரகணமும் நல்ல வேளையில் தீங்கு இழைக்க வில்லை என மகிழலாம். ஆனால் இது வருங்காலக் கொடுமைகளுக்கு, மேலே கண்டபடி, உற்பாதமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/166&oldid=782483" இலிருந்து மீள்விக்கப்பட்டது