பக்கம்:நாடு நலம் பெற.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 167 0 கடல் மட்டம் உயர்வதால் சீனா மற்றும் வங்க தேசம் மிகவும் பாதிக்கப்படும். - ) வட துருவப் பகுதிகளில் வெப்பம் அதிகரிப்பதால் நோய் பரப்பும் கிருமிகள் அதிகரிக்கும். ஏற்கனவே கொசு பாதிப்பால் மலேரியா அதிகரிக்கிறது. . இவ்வாறு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 'தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள் - தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே என்று அப்பர் இறையருளுக்குக் காட்டிய தெய்வ நெறி எல்லா வாழ்வுக்கும் - சிறப்ப்ாகப் பொது வாழ்வுக்குப் பொருந் தும். அப்படி வாழ்ந்தவர் செயல் வையம் உள்ளளவும் வாழும். தம் புகழுக்காக ஆற்றும் செயல் கால வெள்ளத் தில் காணாது நீங்கும். தன்னை மறந்து பெரிய கோயில் கட்டிய இராசராசன் புகழும் அப் பெரிய கோயிலும் இன்றளவும் சிறக்க வாழ்கின்றன. ஆனால், அவன் மகன். கங்கையை வெற்றி கொண்டதற்காக அமைத்த கங்கை கொண்ட சோழபுரம் எங்கோ சிற்றுாராய் யார்க்கும் தெரியாமல் ஒதுங்கிக் கிடக்கிறது. அப்படியே வடக்கே வெற்றி பெற்று வாழ்ந்த அக்பர் அதற்கெனக் கட்டிய பெதேபூர் சிக்ரி' ஒரு காட்சிப் பொருளாக உள்ளது. ஆனால், தம்மை மறந்து அமைந்த காசியும், காஞ்சியும் இன்றும் வாழ்கின்றன. எனவே, பதவியில் உள்ளவர் தம்மை மறந்து நாட்டுநலம் செய்யின் அவர்தம் புகழ் என்றும் வாழும். தம்மை மறந்த காந்தியார் பெயர் என்றும் வாழ்கிறது. மேலை நாட்டில் பலர் இன்றும் இந்தியாவைக் காந்தி நாடு' என்றே அழைக்கின்றனர். சொல்லுதல் யார்க்கும் எளிது அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்றார் வள்ளுவர் எனவே யாவரும் - சிறப்பாக ஆள்வோரும் எதை எதையோ செய்வதாகச் சொல்லி, பின் செய்யாதிருத்தல் பெரிய கொடுமையாகும். எனவே, அளவறிந்து சொல்லுக -சொல்லியவற்றைச் செயல்படுத்துக தமிழில் உள்ளத்து மெய்மையாகிய உண்மை, வாக்கில் மெய்யாகிய வாய்ம்ை, உடல் அல்லது மெய்யில் மெய்யாகிய மெய்ம்மை என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/169&oldid=782489" இலிருந்து மீள்விக்கப்பட்டது