பக்கம்:நாடு நலம் பெற.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 - நாடு நலம் பெற மூன்றும் உள்ளன. எனவே, நாம் மனம், வாக்கு, காயம் என்ற மூன்றும் ஒன்றிய வகையில் வாழ வேண்டும். "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்று வள்ளலார் பாடியுள்ளார். எனவே, நல்லதை எண்ணி, அதையே சொல்லி, அதைச் செயலாக்க வேண்டுவது நம் கடமையாகும். 'நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஒம்புமின்' என்ற சங்க காலப் புலவர் நரிவெரூஉத் தலையார் சொல் லியபடி நல்லது செய்ய முயலுங்கள். இல்லையானால் அமைதியாக இருங்கள் கெட்டவற்றை எண்ணாதீர்கள்சொல்லாதீர்கள்- செய்யாதீர்கள் இன்று எல்லாரும் இந்நாட்டு மன்னர் ஆதலால் இப்பாரத நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் இத்தகைய நல்லொழுக்கங்களைக் கடை பிடிக்க வேண்டும். நல்ல பண்பாட்டினை ஒம்ப வேண் டும். பிசிராந்தையார் கூறியபடி வேந்தன் அல்லவை. செய்யாது, அனைவரும் சான்றாண்மை மிக்கவராய் இருப்பின் நமக்கு நரை தோன்றாது-என்றும் இளமை யாய் இருப்போம். நாட்டுக்கும் உலகுக்கும் நல்லனவே செய்வோம். அப்போது நிலமென்னும் நல்லாள் நம்மை நலம் பெற வாழ வைப்பாள். காலந்தோறும் தவறாது தேவையான அளவு மழை பெய்யும். மக்கள் மன நிறை வோடு வாழ்வார்கள். வையகமெல்லாம் வளம் பெற்று வாழும். நாட்டில் வாழும் நல்லீர்! அனைவரும் பண்பு காத்து - பழம் பெரும் சிறப்பினைப் போற்றி, அல்லவை செய்யாது அறங்காத்து வாழ முயலுங்கள். அதனால் மக்கள் வாழ்வு சிறக்கும்! தரணியும் மகிழ்ந்து உங்களுக்கு வேண்டியவற்றைத் தந்து உதவும். இன்றே உறுதி பூணுங் கள். எல்லாரும் இன்பம் காண வழி வகுத்துக் கொண்டு சிறக்க வாழ முயலுங்கள்!நாடு நாடாகும்-நாம் மனிதரா வோம்! மகிழ்ச்சி பொங்கும் - வற்றாத வளம் சுரக்கும். அதுவே நமக்கு வேண்டுவது. முயலுங்கள், வெற்றி காணுங்கள்! நாடு நலம் பெற நல்லவை காணுங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/170&oldid=782493" இலிருந்து மீள்விக்கப்பட்டது