பக்கம்:நாடு நலம் பெற.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ந்ாடு நலம் பெற பற்றியெல்லாம் விளக்கின் எல்லையற்று விரியும். மஞ்சளும் இஞ்சியும், பாலும் இளநீரும், மிளகும் நெல்லிக்கனியும் பிறவும் அக்காலத்தில் மக்கள் வாழ்வில் சிறக்க இடம் பெற்றுள்ள நிலையினை நாம் காண்கின் றோம். ஒளவைக்கு நெல்லிக்கனி ஈந்து அதிகன் அழியாப் புகழ் பெற்றான். - 'சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத் தட்க்கிச் சாதல் நீங்க எமக்கீந்தனையே’ என்று ஒளவை நெல்லிக்கனியால் சாதல் நீங்கப்பெற்றதாகக் கூறுகின் றார். அவர் நெடுங்காலம் வாழ்ந்தமைக்குக் காரணம் அந்த நெல்லிக்கனிதான்: காலமும் இயற்கையும் உணவு மட்டுமன்றி உறையுள் வகையிலும் அவ்வாறே மக்கள் வாழ்ந்துள்ளனர். கோடையிலே பரந்த வெளியிலே-மணற்பரப்பிலே-ஆற்றங்கரையிலே -கடற்கரையிலே விழா முகத்தாலும் வேறு வகையிலும் தங்கி வாழ்ந்தனர். மாரிக்காலத்தே இல்லுள் இருந்து இன்பம் துய்த்தனர். 'தையும் மாசியும் வையகத் துறங்கு' என்று ஒளவையார் கூறியபடி கொடிய பனிக்காலத்தில் வைக்கோலால் அமைந்த குடில்களில் வாழ்ந்தனர். சிலர் "தையும் மாசியும் வையகத் துறங்கு' என்றால் மற்ற மாதங்களில் "வானகத்து உறங்குவதா எனப் பொருளறி யாது பேசுவர். வை+அகம்' என்றால் வைக்கோலால் அமைந்த வீடு அல்லது குடில் என்பது பொருள். வைக் கோல் பணியினை உள்ளே விடாது-ஒடுகள் கூடப் பணி யினை உள்விடும். ஆனால் வைக்கோல் விடாது. கிராமங் களில் வயல்களில் அறுவடைட்க் காலமாகிய அந்தத் தை, மாசியில் காவன் மக்கள் அத்தகைய வைக்கோல் அமைந்த பந்தல்களில்- சிறுகுடிகளில் தங்குவதை இன்றும் காண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/24&oldid=782511" இலிருந்து மீள்விக்கப்பட்டது