பக்கம்:நாடு நலம் பெற.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முலிகைவளமே நாட்டு வளம் 2b: நோய்களை முன்னறிந்து, கண்டு, நோயின்றி வாழ நம்மை ஆற்றுப்படுத்தியுள்ளனர். உணவு-தொல்காப்பியர்-சங்ககால நிலை தொல்காப்பியர் காலத்திலும் சங்ககாலத்திலும் பின் சமய வளர்ச்சிக் காலத்திலும் இத்தகைய நல்வாழ்வைக் காண முடிகின்றது. மிகப்பழங்கால முதற்கொண்டே தமிழர் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர். நிலத்தை நான்காகப் பிரித்து, அதில் வாழும் மக்கள் நிலைக்கு ஏற்பக் கடவுளர், உணவுவகை போன்றவற்றை அமைத்து சிறக்கப் பணியாற்றி தீதிலா.வாழ்வு வாழ்ந்தனர். தெய் வம் உணவே' எனவே கடவுளுக்கு அடுத்து உணவினையே அவர்கள் குறியாகக் கொண்டனர். எனவே, உண்கின்ற உணவு வாழும் நிலத்துக்கும் மக்கள் உடல்நிலைக்கும் பிற சூழல்களுக்கும் ஏற்ப அமையின் நோய் வராது என்ப்தே அவர் தம் குறிக்கோள்-அது உண்மையும்கூட. தொல்காப் பியர் காலத்தே நால்வகை நிலத்து மக்கள் நலம் காக்கும் உணவுகளை உண்டு வந்ததோடு,.நல்ல பழக்க வழக்கங் களையும் கொண்டு நிலைத்து, நோயின்றி, நலமாக வாழ்ந்தனர் எனக் காணமுடிகின்றது. எனவே நோய் வந்தபின் மருந்தை நாடுவதிலும் வருமுன் காக்கும் வகையே நம் நாட்டுப் பழைய முறை எனத் தெளிதல் வேண்டும். . சங்க காலத்திலேயும் அத்தகைய இயற்கை வாழ்வே இயல்பாக அமைந்திருந்தது. நானில மரபும் தெய்வமும் உணவும் போற்றப்பெற்றன. அவர்கள் உணவில் தேன் முக்கிய இடம்பெற்றதென்பதை இலக் 'கியங்கள் நமக்கு உணர்த்துகின்றன. மரம், செடி, கொடி கள் மதிப்புடன் போற்றப்பெற்றன. பாரி முல்லைக்குத் தேர் கொடுத்த வரலாறு நாடறிந்த ஒன்று. நால்வகை நிலத்து மக்களும் எவ்வெவ்வாறு வாழ்ந்து சிறந்தனர் என்பதைச் சிலப்பதிகாரம் நன்கு விளக்குகின்றது. அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/23&oldid=782508" இலிருந்து மீள்விக்கப்பட்டது