பக்கம்:நாடு நலம் பெற.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20, நாடு நலம் பெற: Q&m sing).9 on 5 popu% alcopts. ‘Prevention is better than Cure என்பது. ஆங்கிலப் பழமொழி. வள்ளுவர் 'வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத், தூறு போலக் கெடும் என்பார். எனவே வாழ்வின் எல்லாத்துறைகளிலும் முன் எச்சரிக்கையோடு இருந்து, வருமுன்னர்க் காத்துக் கொள்ளுதலே உயிர் வாழ்க்கைக்கு உரிய செயலாகும். வருமுன் காப்ப்ோன், வருங்கால் காப்போன், லந்தபின் காப்போன், என்று இந்த நிலை யினை மூன்று மீன்களைக் கொண்டு நாட்டில் ஒரு கதை வழங்குவர். இரு மீன்பிடிப்பாளர், ஒரு குளக்கரையில் முன்னாள் மாலை வந்து, நாளை இதில் மீன் பிடிப்போம்' என்று கூறிச் செல்ல, வருமுன் காப்போன் அவர்கள் வருமுன் சிறுகால்வாய் வழியே தப்பி வேறு குளத்துக்குச் சென்றதென்றும், வருங்கால் காப்போன் அவர்கள் வருவ. தைக்கண்டு, அவசர அவசரமாக சிறு கால்வாய் வழி, விரைந்து,சென்றதால் இடித்தும் மடுத்தும் உடலில் காயங்கள் பெற்றுத் தப்பித்ததென்றும், வந்தபின் காப் ப்ோன்.அவர்கள் வழியிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற போது கொல்லப்பட்டதென்றும் கூறுவர். எனவே, எதற்கும் வருமுன் காத்தலே சிறந்தது. அதிலும் எல்லா வற்றிற்கும் முக்கியமான உடம்பை வளர்ப்பதற்கு, தக்க உபாயங்களைக் கண்டறிந்து, வருமுன் காத்தலே வாழ். வாகும். திருமூலர், s 'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்பர்: ஆம்! அத்தகைய உபாயங்களுள்-ஒன்று-சிறந்தது மூலிகை களால்ே-உணவுப்பண்டங்களாலே-காய், கீரை முதலிய வற்றால்ே நம் உடலை ஒம்புதலே நமக்கு வேண்டப் படுவது. இத்தகைய் இயற்கை முறைகளைப் பண்டைத் தமிழர்கள் நன்கு அறிந்து, போற்றி உலகுக்கு உணர்த் தினர். இதையே சித்தவைத்தியம் என்றும் கூறுவர். வருவதறியும் சித்தர்கள் உப லுக்கும், உயிருக்கும் வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/22&oldid=782506" இலிருந்து மீள்விக்கப்பட்டது