பக்கம்:நாடு நலம் பெற.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு ೧೧78 19 எவ்வாறு முக்கியமாகப் போற்றப்படவேண்டும் எனத் தெரிகிறது. எனவே நலவாழ்வுக்கே இக்குறள் வழிகாட்டி யாக அமைகின்றது. அடுத்த இரு குறட்பாக்களும்கூட இந்த வகையிலேயே அமைகின்றன. . "அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு' (943) என்றும் அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து (944) என்றும் அவ்வாறு சீரணமாய பின்பும் அளவறிந்து உண்டான்' நெடிது வாழ்வான் என்றும், அவ்வாறு அறிந்து, பசிவந்த பின் இயற்கைக்கு ம்ாறல்லாதனவற்றை அளவே உண்ண வேண்டும் என்றும் காட்டியிருக்கிறார். அத்தகைய மாறு பாடில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடில்லை உயிர்க்கு' என்று அடுத்த குறளிலும் வற்புறுத்துகின்றார். அங்கே உடம்பு பெற்றான் என்றும் இங்கே உயிர்க்கு" என்றும் கூறி, உடம்போடு உயிர்பொருந்தி, நெடிதுவாழ இதுவே வழி என வற்புறுத்தி யாவரும் நலம் பெற்று நல்வாழ்வு வாழ வழிகாட்டுகின்றார். பின் ஐந்து குறட் பாக்களிலே இவ்வாறு இல்லாதவன் பெறும் நோய் பற்றி யும் அப்படி நோய் பெற்றவன் தக்க வைத்தியரை நாட வேண்டிய நிலைபற்றியும், அவ்வைத்தியன் வந்த நோயா ளிக்கு எப்படி-எந்த வகையில், நோய் நாடி, நோய் முதல் நாடி, அதுதண்க்கும் வாய்நாடி வாய்ப்பச்செய்ய' வேண்டிய வகை பற்றியும் காட்டி, நோய் நீக்கம் பெற வழி வகுக்கின்றார். எனவே வள்ளுவரும் பிறரும் வையத்து மக்கள் நோய் பெறாது வாழும் நல்வாழ்வையே நோயற்ற வாழ்வையே வற்புறுத்துவர். அந்த நோயற்ற வாழ்வுக்கு வழிகாட்டுவதே இன்றைய மூலிகை வளமே நாட்டு வளம்' என்ற தலைப்பு ஆகும். . இந்தத் தலைப்பினை அன்பர், டாக்டர் வேங்கடேசன் அவர்கள் தம் மூலிகை மணி’ இதழின் கொள்கையாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/21&oldid=782504" இலிருந்து மீள்விக்கப்பட்டது