பக்கம்:நாடு நலம் பெற.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - நாடு நலம் பெற "மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று' (941) என்ற முதல் குறட்பாவிலேயே நோய்க்குக் காரணம் கூறி, அவற்றை அறிந்து தடுக்கும் நெறியில் மக்களை ஆற்றுப் படுத்துகின்றார். உரையாசிரியர்கள் உணவும் செயல் களும்' என்றும் உணவு, உறக்கம், இணை விழைச்சு' என்றும் உணவை முதலாக்கொண்டு அவை அளவுடன் இருக்க வேண்டும் என்றும் இல்லையானால் நோய் விளையும் என்றும் காட்டுவர் வளி முதலா எண்ணிய மூன்று' என்பதற்கு வாதப்பகுதி, பித்தப்பகுதி, கபப்பகுதி என்பர். இவற்றின் அளவு மிகுதலே நோய்க்குக் காரணம் எனக்காட்டி, இவை நிலையில் இருப்பதற்கே, முன்னர் எதிலும் மிகாநெறியை விளக்குகின்றார். வருமுன் காக்கும் நின்லயில் வள்ளுவர் நோய்க்குக் காரணத்தை முதற்கூறினார். அடுத்து, மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி யுனின் (942) என்ற குறட்பாவை அமைத்து அந்த அளவோடு உண்ணும் உணவும் நன்கு செரித்து, நீங்கிய பின்பே, அதன் திறன் போற்றி, மறுபடி உணவு கொள்ளவேண்டும் என்கிறார். ஒரு நாளைக்கு இரு பேருணவும் இருமுறை சிற்றுணவும் இடையிடை காப்பியும் பிறவும் உண்ணும் இன்றைய (அ) நாகரிக உலகுக்கு இது ஒரு வேளை ஏலாததாக இருக்கலாம். அதனாலேயே மருந்தகங்களில் இடமில்லா நிலை உண்டாகிறது. இங்கே வள்ளுவர் "அற்றது போற்றி என்கின்றார். போற்றி என்பது உயர் நிலையில் பயன்படும் சொல். கடவுளைப் போற்று கிறோம்; நல்லனவற்றைப் போற்றிப் பாதுகாக்கிறோம் என்று மிக உயர்ந்து வழங்கும் சொல்லை வள்ளுவர் இங்கே பயன்படுத்துகிறார் என்றால், அருந்தியது அற்ற நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/20&oldid=782502" இலிருந்து மீள்விக்கப்பட்டது