பக்கம்:நாடு நலம் பெற.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகைவளமே நாட்டு வளம் 17 வதேயாகும். இந்த நிலையில் அன்று தமிழர் கண்ட முறையே மூலிகை முறையாகும். நோய்வந்து மருந்து உண்பதைக் காட்டிலும் அதுவாராமல் காப்பது அல்லவா அறிவுடைமை, - வருமுள் காற்றல் 'வருமுன்னர்க் காவாதான்.வாழ்க்கை எரிமுன்னர் வைத்துாறு.போலக்கெடும் (435) என்று வள்ளுவர் கூறியது வாழ்வுக்கு அடிப் படையான-முதலான - உடல் நலத்துக்கு முற்றும் ப்ொருந்திய ஒன்றல்லவா! ஆம் நோய் வராமல் காப்பவன் எவனோ அவனே கு ைற வ ற்ற: செல்வம் பெற்றவன். இதையே ஒளவையார் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்கிறார். வள்ளலார் முருகப்பெருமானிடம் நோயற்ற வாழ்வு நான் வாழ: வேண்டும் என வேண்டுகிறார். யாரும் நோய் வந்து விட்டது; மருந்தகம் போக வேண்டும்' என்று வேண்டுவ தில்லை. நோய் வந்து-சிலவற்றிற்கு இலட்சக்கணக் கிலும், பல மருந்தகங்களில் செலவிட்டுப் பயனற்றுப் பாழ்பட்டு நிற்கும் இன்றைய பாரதமக்களுக்கு வள்ளுவர், பாரதி, இளங்கோவடிகள், ஒளவையார், இராமலிங்கர் போன்றோர் கூறியவை:புரியாதனவாகும். ஆம்! புரியின் நாடு, நாடாகும்-அன்றேல் யார் அறிவார்? 'இத்தகைய நோய் வராத நல்வாழ்வுக்கு வழிக்ாட்டு: வதே மூலிகைவளம். அதனாலேதான் அதன் வளம்ே நாட்டு வளம் என நான்கூறுகிறேன். திருவள்ளுவர் பின் மருந்து' எனவே ஒர் அதிகாரத் தில் பத்துப்பாடல்களை எழுதியுள்ளார். ஆனால், அதிலும் மருந்துண்ணாத, நோயற்ற வாழ்வு:பற்றியே. முதல் நான்கு குறட்பாக்களை அமைக்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/19&oldid=782499" இலிருந்து மீள்விக்கப்பட்டது