பக்கம்:நாடு நலம் பெற.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - நாடு நலம்பெற: ஊருக்கும் மருந்தகம் இல்லை என்ற குறை இன்று இல்லை. என்று கூறுவது-பெருமை கொள்வது-நாடாகாது. உள்ள மருந்தகத்தில், நாட்டில் பிணி இல்லையாதலால்நோய் நலிவுறுத்தவில்லை; ஒருவர் கூட. வரவில்லைபலநாட்களாக-ஆண்டு முழுவதும் வரவில்லை என்று சொல்லுகின்ற நாடே. நாடெனக் கூறத் தகுதி உடையது. 'உறுபசியும் ஓவாப் பிணியுஞ் செறுபகையுஞ் சேரா தியல்வது நாடு (734) என்பர் வள்ளுவர். பசி, பிணி, பகை. இம்மூன்றும் எந்த நாட்டில் உள்ள எவோ அந்த நாடு நாடாகாது என்பது அன்று மட்டு. மன்றி இன்றும் தெளிவாகக் காணும் காட்சியாகும்: இதில் வள்ளுவர் மருந்து கொடுத்து நோய் நீக்க எண்ணற்ற மருந்தகங்கள் உடையதே. நாடு என்று கூற வில்லை. கொடு நோய்-தீரா நோய்- எந்த நாட்டில் எட்டிக் கூடப்பார்க்கவில்லையோ அதையே நாடு என்கின், றார். அவர். இக்கருத்தையே பின் வந்த இளங்கோவடி: கள், சீத்தலைச் சாத்தனார் போன்ற புலவர்கள் வலியுறுத் தியுள்ளனர். 'பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென' வாழ்த்தி வள்ளுவமுதுமகன். இந்திரவிழாவினைப் பூம்புகாரில் அறிமுகம் செய்தான் என்று கூறுவர். வளம் பெருக்கி விட்டோம், செல்வம், கொழிக்கச்செய்து விட்டோம் என்று கூறுவதெல்லாம். இரண்டாந்தரமாகும்.ஆனால் முதலில் ச்ெய்ய வேண்டு. வது பசி, பிணி. பகை இவற்றை நாட்டிலிருந்து ஒட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/18&oldid=782497" இலிருந்து மீள்விக்கப்பட்டது