பக்கம்:நாடு நலம் பெற.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 15 காடு நாடென்ப நாடா வளத்தன நாடல்ல ந்ாட வளந்தரும் நாடு' என்று நாடு' என்ற பெயருக்கு - தகுதி வாய்ந்த ஒரு மாநிலத்துக்கு-இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர். ஆம்: எதற்கெடுத்தாலும் பிற நாட்டார் கையை எதிர்நோக்கி நிற்கும் ஒரு நாடு அப்பெயருக்குத் தகுதி அற்றதாகும். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பாரதி, அத்தகைய நல்ல நாட்டினையே கனவுகண்டான். ஒருசிறு வளர்ச்சிக்கும்-ஆக்கப் பணிக்கும்கூடப் பிறநாடுகளைக் கண்டு, கேட்டு, கையேந்தி நிற்கும் நாடானது, அவன் கனவு கண்ட பாரத நாடு அன்று. இன்றும்-உரிமை பெற்று அரை நூற்றாண்டை அணுகும் நிலையில் உள்ள் நாம், அவன் பாடல்களைப் பாடுவதோடு, அவன் பாடல் களைத் தேசிய உடைமையாக்கி விட்டதோடு அமைந்து அவர் கனவை நனவாக்கி, நாட்டினை நாடாக்கும் செயலில் முனைந்து செயலாற்ற மறந்து விட்டோம். அதனாலேயே நாட்டில் பல குழப்பங்கள்- மாறாட்டங் கள்- போராட்டங்கள்-கொலை, களவு போன்ற கொடு மைகள் நடைபெறுகின்றன. இத்தகைய அவல நிலையைப் போக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். ஆம்! அவன் கூறியபடி நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னரல் லவா! நாடு பற்றிக் கூறிய வள்ளுவர் எல்லாம் இயைந்து பிறர் கையை நோக்காத நாட்டில் இன்னின்ன இருக்கக் கூடாது எனவும் காட்டுகின்றார். அவற்றுள் ஒன்றே பிணி. ஆம்! நாட்டில் நோய் அல்லது பிணி இருக்கக் கூடாது. ஒரு நாளைக்கு ஒரு மருந்தகம் கட்டிவிட்டோம், ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/17&oldid=782491" இலிருந்து மீள்விக்கப்பட்டது