பக்கம்:நாடு நலம் பெற.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நாடு நலம் பெற 'சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே' என்பது அவர் வாக்கு. இவ்வாறே பலப்பல காட்டலாம். இதுவன்றி, இப்பயிர், பச்சை வளர அடிப்படையான நீர், ஆறு பற்றியும், அவை தோன்றும்-மூலிகை வளரும் மலை பற்றியும் புலவர்கள் காட்டி நம்மை வழிநடத்தும் நிலையும் எண்ணத்தக்கது, ஆசிரியர்தம் உயர்நிலையைத் தக்க காரணங்கள் காட்டி, பவணந்தியார் மலைக்கும் மலருக்கும் பூமிக்கும் ஒப்பிட்டு உயர்த்துகின்றார். கம்பர் சான்றாண்மைக்கே கோதாவரி ஒட்டத்தை ஒப்பிடு கின்றார்- அவர்தம் கவிக்கே ஒப்பிடுகின்றார். புவியினுக் கணியா யான்ற பொருடந்து புலத்திற் றாகி அவியகத் துறைக டாங்கி யைந்திணை நெறிய ளாவிச் சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமுந் - தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்: என்பது கம்பர் வாக்கு. இவ்வாறு இம்மை உடல் நல உயிர் நலவாழ்விற்கும் செம்மை நலத்துக்கும் மட்டுமன்றி, மறுமைக்கும்,என்றும் உலகுக்கும் உயிர்க்கும் உதவும் இந்த இயற்கை ஈந்த செல்வங்களாகிய-மூலிகைகள்-செடிகள்கொடிகள்-மரங்கள்-பிறவற்றை ஓம்பி வளர்த்து நாமும் வாழ முற்படுவோமாக! இனி தொட்ட பொருளைக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/16&oldid=782468" இலிருந்து மீள்விக்கப்பட்டது