பக்கம்:நாடு நலம் பெற.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 13 தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்ல் தலையாலே தான்தருத லால்' என்று நன்றிமறவாமைக்குத்தென்னைவழியும், 'சாந்தனையும் தீய்னவே செய்திடினும் தாம்அவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்த்ர் குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து' மறைக்குமாம் கண்டீர் மரம்' . என்று, இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும்பண். பினை மரங்கள் வழியும் ஒளவையார் நமக்கு அறிவூட்டு கிறார். மனிதன்தருக்கின்றி வளைந்து மற்றவர் வாழத் தான் வாழின் சிறப்பான் என்பதையும்; இன்றேல் அடி, பட்டு அழிவான் என்பதையும். வருத்தவளை வேயரசர் மாமுடியின் மெலாம் வருத்த வளையாத மூங்கில்- தரித்திரமாய் வேழம்பர் கைப்புகுந்து மேதினியெல் லாந்திரிந்து தாழுமவர் தம்மடிக்கீழ்த் தான் என்ற வெண்பாவால் விளக்குகிறார். 'பயன் மரம் உள்ளுர்ப் பழுத்தற்றாற் செல்வம்' நயனுடை யான்கண் படின்' என்று வள்ளுவர் இக்குறளின் மூலமும் வேறு பலவற்றின் மூலமும் மரம், செடி முதலியவை காட்டி மனித்னை மனிதனாக வாழ வைக்க முயல்கின்றனர். திருத்தக்க த்ேவர் முற்றிய அறிவுடையார் செயல் பணிவுடைய நிலை என்பதையும் அற்பர் செல்வம்: பெறின் தலைநிமிர்ந்து தருக்குடையராய்ச்சிறிதுகாலம்ே: திரிந்து-அழிவர் என்பதையும்.நெற்பயிரின் மூலம் காட்டி நம்மைத் திருத்தி வாழவைத்துச் செல்கதிக்கு ஆளாக்குரி கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/15&oldid=782447" இலிருந்து மீள்விக்கப்பட்டது