பக்கம்:நாடு நலம் பெற.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர்.பலர் அருளாளர் பலர்; ஆக்க நெறியாளர் பலர், காஞ்சிப்பெரியவர் இவருக்கு மூலிகைச் சக்கரவர்த்தி' என்று.பட்டம் சூட்டியுள்ளார். திருமுருக கிருபானந்த வாரியார் மூலிகை மன்னர்' எனப் பாராட்டியுள்ளார். அத்தகைய பெருமைக்கு.உரியவர்- எல்லாரும் இன்புற்று இருக்கும் 'நல்வாழ்விற்கு வழிகோலியவர் - அமரர் மூலிகை மணி கண்ணப்பர் அடிவணங்கி என் கடமை யைத் தொடங்குகின்றேன். மரம செடிகொடிகள் மரம், செடி, கொடி, மூலிகை வகைகள் உடல் நோய் களை மட்டும்"தீர்க்கின்றன என எண்ணலாகாது. பலர் அப்படித்தான் நினைக்கின்றனர். ஆனால் அவை உயிர் நலத்தினை-உயிர் வாழவேண்டிய பண்பாட்டு நெறி யினை-சான்றாண்மையினை நமக்குக் கற்றுத் தந்து,செல் லும் தேய்த்துக்கும் உறுதுணையாக நிற்கின்றன என்பதை உணரவேண்டும். ஆறறிவு பெற்றவனாகிய மனிதன் இன்று மனிதனாக' வாழவில்லை- நிலை கெடுகிறான்- தடுமாறுகிறான்மற்றவர்ைக் கெடுக்க - அழிக்க நினைக்கிறான்- பேசு கிறான்- செயல்படுகிறான்- நன்றி மறக்கின்றான்நில்ல்ன மறக்கிறான். அறம் விட்டு மறம் கொண்டு மனித வாழ்வினையே பாழாக்குகின்றான். அத்தகைய கொடிய நிலைகளை நீக்க.நல்லவர்கள்-சான்றோர்-உலகம் வாழ நினைக்கின்றவர்கள்-அறம் தழைக்க ஆசைப்படுகின்றவர் கள், இச்செடி கொடிகளைத் துணைக்கழைத்துத்தான் நம்மைத் தெருட்டித் தெளிய வைக்கின்றனர். 'நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா- நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/14&oldid=782427" இலிருந்து மீள்விக்கப்பட்டது